மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீட்டின் கீழ் உள்ள அனைத்து இடங்களும் நிரம்பின.. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, November 19, 2020

Comments:0

மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீட்டின் கீழ் உள்ள அனைத்து இடங்களும் நிரம்பின..

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீட்டின் கீழ் அனைத்து இடங்களும் நிரம்பிவிட்டன. தமிழக அரசு நடத்திவரக்கூடிய மருத்துவக் கலந்தாய்வில் இன்றைய தினம் அரசு பள்ளி மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட எம்.பி.பி.எஸ். இடங்கள் முழுவதுமாக மாணவர்களால் எடுக்கப்பட்டிருக்கிறது. தமிழக அரசு சமீபத்தில் நிறைவேற்றிய அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீட்டின் அடிப்படையில் நேற்று தொடங்கி நாளை வரை 3 நாட்கள் கலந்தாய்வானது நடத்தப்படுகிறது. அரசுப் பள்ளி மாணவர்களுக்காக 313 எம்.பி.பி.எஸ். இடங்களும், 92 பி.டி.எஸ். இடங்களும் ஏற்கனவே அரசு ஒதுக்கீட்டின் கீழ் இருந்து உள்ஒதுக்கீட்டிற்கு கொடுக்கப்பட்டிருந்தது. நேற்று சுமார் 270 மாணவர்களும், இன்று 300 மாணவர்களும் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டிருந்தனர். நேற்றைய தினம் 227 மாணவர்கள் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் இருக்கக்கூடிய அரசு ஒதுக்கீட்டு இடங்களை தேர்வு செய்தனர்.
இன்றைய தினம் காலையிலிருந்து கலந்தாய்வு நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் மீதமிருந்த எம்.பி.பி.எஸ். இடங்கள் மாணவர்களால் எடுக்கப்பட்டிருக்கிறது. சுமார் 86 இடங்களை மாணவர்கள் இன்றைய தினம் தேர்வு செய்துள்ளனர். 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்றும் 86 மாணவர்கள் மட்டுமே எம்.பி.பி.எஸ். இடங்களில் சேர்ந்திருக்கின்றனர். தனியார் மருத்துவ கல்லூரிகளில் கட்டணம் அதிகமாக இருந்ததால் தகுதியுள்ள பல மாணவர்கள் சேரவில்லை. தொடர்ந்து, அரசு கல்லூரிகளில் இடம் கிடைத்தால் மீண்டும் சேர்வதற்கு வாய்ப்பு இருப்பதாக அவர்களின் பெயர்கள் காத்திருப்பு பட்டியலுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இன்று மாலை 5 மணியுடன் அரசுப்பள்ளி மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த 313 எம்.பி.பி.எஸ். இடங்களும் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றது. நாளைய தினமும் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்தாய்விற்கு அழைக்கப்படவிருக்கிறார்கள். நாளைய தினம் வரக்கூடிய மாணவர்களுக்கு முழுவதுமாக பி.டி.எஸ். பல் மருத்துவம் சார்ந்த இளநிலை படிப்பிற்கான 60 இடங்கள் மட்டுமே மீதமிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 21ம் தேதியிலிருந்து பொது கலந்தாய்வானது தொடங்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews