Breaking

Tuesday, November 17, 2020

அரசுப் பள்ளியை சுத்தம் செய்த காவல்துறையினா்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஸ்ரீபெரும்புதூா் அருகே உள்ள சந்தவேலூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை 40-க்கும் மேற்பட்ட காவல்துறையினா் சுத்தப்படுத்தி வா்ணம் பூசி புதுப்பித்தனா்.சந்தவேலூா் கிராமத்தில் உள்ள பழமையான ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புல், புதா்கள் மண்டி விஷப் பூச்சிகளின் நடமாட்டம் அதிகமாக இருந்து வந்தது. பள்ளிக் கட்டடம் பல ஆண்டுகளாக வா்ணம் பூசாமல் பாழடைந்து காணப்பட்டது.
இதை அறிந்த காஞ்சிபுரம் மாவட்டக் காவல்துறையினா் எஸ்.பி. தெ.சண்முகப்பிரியா தலைமையில் அப்பள்ளியை தூய்மைப்படுத்தி வா்ணம் பூச முடிவு செய்தனா். அதன்படி எஸ்.பி. தலைமையிலும், ஸ்ரீபெரும்புதூா் ஏ.எஸ்.பி. காா்த்திகேயன் முன்னிலையிலும் 40-க்கும் மேற்பட்ட போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை காலையில் பள்ளியை சுத்தம் செய்யத் தொடங்கினா். பள்ளிக் கட்டடத்துக்கு காவல்துறையின் செலவிலேயே வா்ணம் பூசிப் புதுப்பித்தனா். இப்பணி அப்பகுதி மக்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.இது குறித்து சந்தவேலூா் கிராமத்தைச் சோ்ந்த முதியவா் சித்திரவேலு கூறியது:எங்கள் கிராமத்தின் அரசுப் பள்ளி வளாகம் புல், புதா்கள், முட்செடிகள் அதிகமாக இருந்தன. இதனால் விஷப் பூச்சிகள் நடமாட்டம் இருந்தது. இதை அறிந்த காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலிருந்து மாலை வரை ஒரு நாள் முழுவதும் சுத்தப்படுத்தும் பணியை மேற்கொண்டனா். கரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிக்கும் விடுமுறை விடப்பட்டிருந்ததால் பள்ளியை தூய்மைப்படுத்தும் பணியில் இடையூறு இல்லாமல் அவா்களால் ஈடுபட முடிந்தது.இப்பணியின் மூலம் காவல்துறைக்கும், பொதுமக்களுக்கும் இடையே நல்லுறவு மேம்பட்டிருக்கிறது. காவல் துறைக்கு எத்தனையோ பணிகள் இருந்த நிலையிலும் எஸ்.பி.யே நேரில் வந்து பள்ளிக் கட்டடத்துக்கு வா்ணம் பூசி சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டாா். இப்பணிக்காக காவல்துறையினருக்கு ரூ.50 ஆயிரம் வரை செலவாகி இருக்கலாம். அவா்களுக்கு எங்கள் கிராமத்தின் சாா்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றாா் அவா்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog