அரசுக்கல்லுாரி மாணவர்களுக்கு போட்டித்தேர்வுகளுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.உடுமலை, அரசு கலைக் கல்லுாரியில் இளநிலை மற்றும் முதுநிலை பிரிவுகளில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் படிக்கின்றனர். பொள்ளாச்சி, தாராபுரம் மற்றும் உடுமலை சுற்றுப்பகுதியில், ஒரே அரசு கல்லுாரி உள்ளதால், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் உயர்கல்விக்கு, இக்கல்லுாரி அடிப்படையாக உள்ளது.
போட்டித்தேர்வுகளுக்கு தயாராவதுக்கு, அரசு கல்லுாரிகளில் போதிய வசதிகள் இருப்பதில்லை. இதனால், மாணவர்கள், தனியார் பயிற்சி வகுப்புகளுக்கு செல்ல வேண்டியுள்ளது.சில ஆண்டுகளுக்கு முன்பு, போட்டித்தேர்வுகளுக்கான சிறப்பு வகுப்புகள் நடத்த யு.ஜி.சி.,யின் சார்பில் நிதி வழங்கப்பட்டது. இதனால் இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்லுாரியிலேயே சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு, பல தேர்வுகளுக்கு மாணவர்கள் தயார்படுத்தப்பட்டனர்.பல்வேறு போட்டி தேர்விற்கு மாணவர்களை தயார் செய்யும் மைய விரிவுரையாளர்கள் மற்றும் கல்லுாரி பேராசிரியர்களைக்கொண்டு இவ்வகுப்புகள் நடத்தப்பட்டது. ஆனால் அத்தகைய பயிற்சி வழங்கும் திட்டம் ஓராண்டு மட்டுமே செயல்படுத்தப்பட்டது.நுாலகங்கள், மாவட்ட வேலைவாய்ப்பு துறைகளின் சார்பில் மூன்று மாதங்கள் என குறுகிய கால இடைவெளிக்கு, போட்டித் தேர்வு அறிவிக்கும்போது, பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.
அரசுக்கல்லுாரி பேராசிரியர் ஒருவர் கூறுகையில், ''உடுமலை அரசு கல்லுாரி மட்டுமின்றி, அனைத்து கல்லுாரிகளிலும், இவ்வாறு, போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை நடைமுறைப்படுத்தலாம். மாணவர்களும், விழிப்புணர்வோடு, இந்த வாய்ப்பை பயன்படுத்த வேண்டும்.போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பில், வேலைவாய்ப்பு பெறுவதற்கான சிறப்பு பயிற்சிகளையும் ஒருங்கிணைந்து வழங்கினால், திறமையுள்ள மாணவர்கள் பலரின் எதிர்காலத்துக்கும் அரசுக்கல்லுாரிகள் அடிதளமாக அமையும்,'' என்றார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.