ஒருங்கிணைந்த கல்வி தொகுப்பூதிய பணியாளர்களுக்கு புதிய ஊதியம் நிர்ணயம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். கடலூரில்
ஒருங்கிணைந்த கல்வி தொகுப்பூதிய பணியாளர்கள் நலச் சங்கம் கோரிக்கை...!
-------------------------------------------------------------------------
கடந்த நவம்பர். 17.கடலூரில் ஒருங்கிணைந்த கல்வி தொகுப்பூதிய பணியாளர்கள் நலச் சங்கத்தின் ஆலோசகர் ப.அழகப்பன் அவர்களின் வழிகாட்டுதலின்படி இணைய வழியாக நடைபெற்ற நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1.மத்திய அரசும் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் திட்ட ஒப்புதல் வாரியம் (PAB) வழங்கும் திட்டம் ஏற்பளிப்பு நிதியை 4 ஆண்டு நிலுவை உடன் வழங்க வேண்டும்.
2.தொகுப்பூதிய பணியாளர்கள் புதிய ஊதியம் நிர்ணயம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்
3.இத்திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ESI, மருத்துவக் காப்பீட்டு வசதி சமூக பாதுகாப்பு பயண்களை வழங்க வேண்டும்.
4.மாற்றுத்திறனாளிகளுக்கு ஊர்திப்படி ரூபாய் ஆயிரத்திலிருந்து ரூ 2500 உயர்த்தி வழங்க வேண்டும்.
5.உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி சம வேலைக்கு சம ஊதியம் மற்ற மாநிலங்களில் வழங்குவது போல வழங்க வேண்டும்.
6.RMSA இருந்து ஈர்க்கப்பட்ட தொகுப்பூதிய பணியாளர்களுக்கு EPF வழங்க வேண்டும்
7.5 முதல் 10 ஆண்டுகள் வரை பணிபுரியும் தொகுப்பூதிய பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் 24 மாவட்டங்களைச் சேர்ந்த 90 மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். வருகின்ற மார்ச் 2021 பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டு தலைவர், செயலாளர், பொருளாளர் சங்க உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இக்கூட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் தலைமை தாங்கினார் இறுதியில் மாநில ஒருங்கிணைப்பாளர் வினோத்குமார் நன்றி கூறினார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.