'நீட் நுழைவு தேர்வு தொடர்பாக, தேடப்படும் இரண்டு பெண்கள் உட்பட, 10 பேரை அடையாளம் காண்பது சவாலாக உள்ளது' என, சி.பி.சி.ஐ.டி., போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மருத்துவ படிப்புகளுக்கான, 'நீட்' நுழைவு தேர்வு முறைகேடு தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர்.இந்த முறைகேடு தொடர்பாக, சென்னையில் வசித்து வரும், தேனி அரசு மருத்துவக் கல்லுாரி யில் சேர்ந்த, மாணவர் உதித் சூர்யா, அவரது தந்தை, டாக்டர் வெங்க டேசன் உள்ளிட்ட, 10 பேரை கைது செய்தனர்.இரண்டு பெண்கள்அத்துடன், இந்த வழக்கில், தமிழக மாணவர்களுக்கு பதிலாக, ஆள்மாறாட்டம் செய்து, நீட் தேர்வு எழுதிய, இரண்டு பெண்கள் உட்பட, 10 பேரின் படத்தை, சி.பி.சி.ஐ.டி., போலீசார், பிப்ரவரி, 10ல் வெளியிட்டனர்.
இவர்கள் பற்றிய தகவல் தெரிந்தால், 94438 84395 என்ற, மொபைல் போன் எண்ணிலும், Dspccwcbcid@tn.gov.in என்ற, இ - மெயில் முகவரியிலும் தெரிவிக்கலாம் என, கூறியிருந்தனர். அதன்பின், கொரோனா தொற்று பரவல் காரணமாக, இந்த வழக்கு விசாரணை கிடப்பில் போடப்பட்டது. தற்போது, இந்த ஆள்மாறாட்ட நபர்கள் குறித்து, ஆதார் விபரங்களை சேகரித்து, அடையாளம் காணும் பணியில், சி.பி.சி.ஐ.டி., போலீசார் ஈடுபட்டனர்; அதுவும் பயன் அளிக்கவில்லை.
பல்வேறு யுத்திகள் : இதுகுறித்து, சி.பி.சி.ஐ.டி., போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:நீட் தேர்வு ஆள்மாறாட்ட நபர்களை அடையாளம் காண்பது பெரும் சவாலாக உள்ளது. தொழில் நுட்ப உதவியுடன், அவர்கள் எந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து, துப்பு துலக்கி வருகிறோம். ஆள்மாறாட்ட நபர்களை அடையாளம் காண, பல்வேறு யுத்திகளையும் கையாண்டு வருகிறோம். பொதுமக்கள் ஒத்துழைத்தால், அவர்கள், 10 பேரையும் விரைவில் கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்தி விடலாம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.