ஹிந்தி பிரசார சபா தேர்வுகள் திடீர் ரத்து - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, October 19, 2020

Comments:0

ஹிந்தி பிரசார சபா தேர்வுகள் திடீர் ரத்து

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஹிந்தி பிரசார சபாவின் தேர்வுகள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதால், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த அமைப்பு, நிகர்நிலை பல்கலைக்கு இணையான அந்தஸ்து பெற்றுள்ளதால், ஹிந்தி பாடத்திட்டங்களை உருவாக்கி, ஹிந்தி படிப்புகளை நடத்தி, சான்றிதழ் தருகிறது.ஹிந்தி பண்டிட்மொத்தம், ஒன்பது தேர்வுகளில், ஒரு தேர்வில் தேர்ச்சி பெற்றால், அடுத்த தேர்வை எழுதலாம். இப்படி, ஒன்பது தேர்வையும் முடித்த பின், அவர்கள் ஹிந்தி பண்டிட் ஆகலாம். ஆண்டுதோறும், பிப்ரவரி மற்றும் ஆகஸ்டில் தேர்வுகள் நடத்தப் படும். இந்த முறை, கொரோனா வைரஸ் பிரச்னையால், ஆகஸ்ட் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டு, இம்மாத இறுதியில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதற்காக விண்ணப்பங்கள் பெற்று, மாணவர்களிடம் கட்டணமும் வசூலிக்கப்பட்டது. இந்நிலையில், பெரும்பாலான தேர்வுகளை ரத்து செய்து, ஹிந்தி பிரசார சபா, திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பு வருமாறு:இந்த மாதம் நடக்கவிருந்த தேர்வுகளில், பரிச்சயா, பிராத்மிக், மத்யமா, ராஷ்ட்ரபாஷா, பிரவேஷிகா ஆகிய, தேர்வுகள் ரத்து செய்யப்படுகின்றன. விஷாரத் பூர்வா, விஷாரத் உத்ரா, பிரவீன் பூர்வா, பிரவீன் உத்ரா ஆகிய தேர்வுகள் மட்டும் நடக்கும்.இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பித்து கட்டணம் செலுத்தியவர்கள், ஹால் டிக்கெட்டை மட்டும் பதிவிறக்கம் செய்தால் போதும்; தேர்வை எழுத வேண்டாம். ஹால் டிக்கெட் எண்ணை வைத்து, தற்போது ரத்துசெய்யப்படும் தேர்வுக்கு அடுத்த நிலை தேர்வை, அடுத்த பிப்ரவரி அல்லது ஆகஸ்டில் எழுதலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.குழப்பம்இந்த அறிவிப்பு, ஆசிரியர்கள், மாணவர்களை குழப்பம் அடையச் செய்துள்ளது.திடீரென தேர்வு ரத்து என்று அறிவித்துள்ள, ஹிந்தி பிரசார சபா, ரத்தாகும் தேர்வில், 'ஆல் பாஸ்' என்றோ, அதற்கு எந்த அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றோ அறிவிக்கவில்லை. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews