இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், கணினி அறிவியல், ஐ.டி., போன்றவை, மாணவர்களின் முதல் விருப்ப பட்டியலில் இடம் பிடித்துள்ளன.
அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜினியரிங் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கின் முதல் சுற்று முடிந்துள்ளது. இந்த ஆண்டு, 461 கல்லுாரிகளில், 1.63 லட்சம் இடங்களுக்கு, 1.12 லட்சம் பேர், கவுன்சிலிங்கில் பங்கேற்றுள்ளனர். அக்., 1ல், சிறப்பு பிரிவு கவுன்சிலிங் துவங்கியது; இதில், 500 இடங்கள் நிரம்பின.
இதையடுத்து, பொதுப்பிரிவு மற்றும் தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கு, அக்., 8ல், கவுன்சிலிங் துவங்கி, முதல் சுற்றில் இடங்கள்ஒதுக்கீடு, நேற்று முன்தினம் முடிந்தது.இதில், 13 ஆயிரத்து, 700 பேர் அழைக்கப்பட்டனர். அவர்களில், 70 சதவீதம் பேர், இடங்களை தேர்வு செய்து உள்ளனர்.இந்த கவுன்சிலிங்கில், 'டிஜிட்டல்' பாடங்கள் என்று சொல்லப்படும், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ், ஐ.டி., போன்றவை, மாணவர்களின் விருப்பத்தில் முன்னணியில் உள்ளன.
அண்ணா பல்கலையின் வளாக கல்லுாரிகளில், கணினி அறிவியல், ஐ.டி., - எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், சிவில், இன்ஸ்ட்ரூமென்ட் இன்ஜினியரிங் என, எல்லா பாடப்பிரிவுகளையும், மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர்.இரண்டாம் சுற்று கவுன்சிலிங்குக்கு, இன்று உத்தேச ஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது.
இதில், அண்ணா பல்கலையில் மீதமுள்ள இடங்களும் நிரம்பி விடும் என, எதிர்பார்க்கப் படுகிறது.அண்ணா பல்கலையின்உறுப்பு கல்லுாரிகள், அரசு இன்ஜினியரிங் கல்லுாரிகளின் இடங்களும், இரண்டாம் சுற்றில் நிரம்பும் வாய்ப்பு உள்ளது.
அண்ணா பல்கலையை தொடர்ந்து, எஸ்.எஸ்.என்., கல்லுாரி, கோவை பி.எஸ்.ஜி., இன்ஜி கல்லுாரி மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி, மதுரை தியாகராஜர் கல்லுாரி.ஈரோடு கொங்கு கல்லுாரி, சி.ஐ.டி., எனப்படும், கோவை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரி ஆகியவற்றிலும், பெரும்பாலான இடங்கள் நிரம்பியுள்ளன.மொத்தமுள்ள, 461 கல்லுாரிகளில், 294 கல்லுாரிகளில், முதல் சுற்றில் ஒரு இடம் கூட நிரம்பவில்லை.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.