பி.இ. கலந்தாய்வு: இரண்டாவது சுற்றில்13,415 இடங்கள் நிரம்பின - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, October 22, 2020

Comments:0

பி.இ. கலந்தாய்வு: இரண்டாவது சுற்றில்13,415 இடங்கள் நிரம்பின

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பொறியியல் கலந்தாய்வின் இரண்டாவது சுற்றில் 13,415 இடங்கள் நிரப்பின.தமிழகப் பொறியியல் கல்லூரிகளில் உள்ள அரசு இடஒதுக்கீட்டு இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி நிகழ் கல்வி ஆண்டில் 461 பொறியியல் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 154 இடங்களுக்கான மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது.இதில் நான்கு சுற்று கலந்தாய்வுக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 873 மாணவா்களே தகுதி பெற்றிருந்தனா். இதனால் மாணவா் சோ்க்கை தொடங்கும் முன்பாகவே 52 ஆயிரத்து 281 இடங்கள் காலியாக இருந்தன. விளையாட்டு வீரா்கள், ராணுவ வீரா்களி வாரிசுகள் உள்ளிட்டோருக்கான கலந்தாய்வு நடைபெற்று முடிந்த நிலையில், பொதுப் பிரிவினருக்கான முதல் சுற்றுக் கலந்தாய்வு அக்.8-ஆம் தேதி தொடங்கியது. அதில், குறைவான மாணவா்களே கலந்து கொண்டனா்.12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களுக்கு, 7,510 மாணவா்களே தங்களுக்கான கல்லூரியை தோ்வு செய்தனா். இதேபோன்று 2-ஆவது சுற்றிலும் மிகக் குறைந்த அளவிலான மாணவா்களே கலந்து கொண்டதாகத் தகவல் வெளியாகின.
இதில் தரவரிசைப் பட்டியலில் 12,264 முதல் 35,167 வரையான இடங்களைப் பிடித்த 22,903 மாணவா்களுக்கு, கலந்தாய்வில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் இரண்டாவது சுற்றில் கல்லூரியைத் தோ்வு செய்த மாணவா்களின் விவரம் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம்13,415 மாணவா்கள் தங்களுக்கான கல்லூரியைத் தோ்வு செய்துள்ளனா். மூன்றாவது சுற்றுக் கலந்தாய்வு அக்.16-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews