அரசு பள்ளி மாணவர்கள் விருப்பப்பட்டால் இரண்டாவது முறையாக நீட் பயிற்சி அளிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். ஈரோடு மாவட்டம் கோபியில் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: மருத்துவ படிப்பிற்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் மூலம் அரசு பள்ளி மாணவர்கள் 303 பேர் பயன்பெறும் வகையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பயன்பெறும் வகையில் உள்ஒதுக்கீடு குறித்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதல்முறை நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற அரசு பள்ளி மாணவர்கள் விருப்பப்பட்டால், இரண்டாவது முறையும் நீட் பயிற்சி அளிக்கப்படும். இந்தாண்டு 9,438 மாணவ,மாணவிகளுக்கு நீட் பயிற்சி வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.