அகில இந்திய மருத்துவக் கலந்தாய்வு: பங்கேற்கும் மாணவா்கள் கவனத்துக்கு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, October 31, 2020

Comments:0

அகில இந்திய மருத்துவக் கலந்தாய்வு: பங்கேற்கும் மாணவா்கள் கவனத்துக்கு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
'அகில இந்திய மருத்துவ கவுன்சிலிங் கட்டணங்களை பார்த்து, கல்லுாரியை தேர்வு செய்ய வேண்டும்' என, மத்திய சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுதும் உள்ள அரசு மருத்துவ கல்லுாரிகளில் இருந்து, ௧௫ சதவீத இடங்கள், அகில இந்திய கவுன்சிலிங்கிற்கு ஒதுக்கப்படுகின்றன.இந்த இடங்கள் மற்றும் நிகர்நிலை பல்கலை, மத்திய பல்கலையில் உள்ள மருத்துவ இடங்களுக்கான மாணவர் சேர்க்கை, www.mcc.nic.in என்ற, இணையதளத்தில் துவங்கி நடந்து வருகிறது. 'நீட்' தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள், இணையதளத்தில் பதிவு செய்து, கல்லுாரிகளை தேர்வு செய்து வருகின்றனர்.இந்நிலையில், கவுன்சிலிங் நடத்தும், மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குனரகம் வெளியிட்ட செய்தி குறிப்பு:கவுன்சிலிங்கில் பங்கேற்கும் மாணவர்கள், கட்டண விபரங்களை பார்த்து, கல்லுாரிகளை தேர்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு கல்லுாரிக்கும் கட்டணம் மாறுபடும். தமிழகத்தில் உள்ள ராஜா முத்தையா மருத்துவ கல்லுாரியை அரசு ஏற்று நடத்தினாலும், அந்த கல்லுாரியில், அரசு கல்லுாரியை விட அதிக கட்டணம் உள்ளது. அதனால், கட்டணம் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும், நன்றாக பார்த்த பின், கல்லுாரியை தேர்ந்தெடுக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews