அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி அறிவிக்கப்பட்டது குறித்து மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. தமிழக முதலமைச்சரை வணங்கி அரியர் மாணவர்கள் பேனர் வைத்து இந்த தருனத்தை கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், ஏஐசிடிஇ மற்றும் யுஜிசி-யிடம் இருந்து எவ்வித கடிதமும், மின்னஞ்சலும் வராததாதல் சென்னை பல்கலைக் கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதுகுறித்த விபரங்களை காணலாம் வாங்க. அரியர் மாணவர்கள் தேர்ச்சி
கொரோனா ஊரடங்கின் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படாத நிலையில், கல்லூரி மாணவர்களுக்கான அரியர் தேர்வுகளை ஒத்திவைத்து தமிழக முதலமைச்சரை எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார். இது மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
அண்ணா பல்கலையை எச்சரித்த AICTE
இந்நிலையில், பொறியியல் மாணவர்களின் அரியர் தேர்வுகளை ரத்து செய்தால் அண்ணா பல்கலைக் கழகத்தின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என அகில இந்திய தொழில் நுட்ப கவுன்சில் (AICTE) எச்சரிக்கை விடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. அப்பல்கலைக் கழக துணை வேந்தர் சுரப்பா வெளியிட்டுள்ள இந்த தகவலால் அண்ணா பல்கலையில் பயின்று வரும் அரியர் மாணவர்கள் மத்தியில் பேரதிர்ச்சி நிலவி வருகிறது. உயர் கல்வித் துறை அமைச்சர் மறுப்பு
இதனைத் தொடர்ந்து, மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் சமீபத்தில் அளித்த பேட்டியில் அரியர் தேர்வு தொடர்பாக ஏஐசிடிஇ மற்றும் யுஜிசியிடம் இருந்து எந்த கடிதமும் தமிழக அரசுக்கு வரவில்லை. ஏஐசிடிஇ-யிடம் இருந்து கடிதம் வந்ததாக கூறும் அண்ணா பல்கலைக்கழகம் துணைவேந்தர் சுரப்பா என்ன பதில் கடிதம் எழுதினார்? என அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னைப் பல்கலை அதிரடி அறிவிப்பு
இதனிடையே, அரியர் மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி வழங்குவது தொடர்பாக கடிதமோ, மின்னஞ்சலோ பல்கலைக் கழக மானிய குழுவிடம் இருந்து வரவில்லை எனவும், அரசு அறிவித்தபடி அரியர் மாணவர்களுக்குத் தேர்ச்சி வழங்கப்படும் என்று சென்னை பலகலைக் கழக துணைவேந்தர் கௌரி தெரிவித்துள்ளார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U