கோவை பள்ளி மாணவர் வடிவமைத்த ஆப் 152 நாடுகளில் அனுமதியுடன் பயன்பாடு.கோவையில் பள்ளி மாணவன் தயாரித்த மொபைல் ஆப், 152 நாடுகளில் அனுமதி பெற்று பயன்படுத்தப்பட்டு வருகிறது.கோவை, ராமநாதபுரம், சுசிலா நகரை சேர்ந்த செந்தில்குமார் மகன் சஞ்சய் குமார், 16. இவர் உடையாம்பாளையம் அத்வைத் ஜி.என்.எஸ்., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார்.
கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பாடப்பிரிவு படிக்கும் மாணவர் சஞ்சய்குமார், 'செக்யூர் மெசெஞ்சர்' என்ற மொபைல் ஆப் வடிவமைத்து காப்புரிமை பெற்றுள்ளார்.சஞ்சய்குமார் கூறியதாவது:ஆப் தயாரிப்பது குறித்து தினமும் இணையதளத்தில் பல்வேறு விஷயங்களை பார்த்து கற்று வந்தேன். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் படித்து வருவதால், தேடல்கள் எளிதாக இருந்தன. செக்யூர் மெசெஞ்சர்' என்ற ஆப் உருவாக்கினேன். இதற்காக உள்ள பிளே கன்சோல் என்ற தளத்தில் பதிவு செய்தேன் அதில், இந்த 'ஆப்' வடிவமைப்பு, போட்டோ, வீடியோ உள்ளிட்ட தகவல் கேட்கப்பட்டது. இத்தகவல்களை பகிர்ந்து, 10 நாட்களுக்கு பின், பாதுகாப்பு, புதுமையான விஷயங்கள் ஆய்வு செய்து, பிளே ஸ்டோரில் இந்த ஆப் டவுன்லோடு செய்ய காப்புரிமை அளித்தனர்.
தற்போது 'பிளே' ஸ்டோரில் இந்த ஆப், 'விர்சுவல் பிரைவேட் நெட்வொர்க் வி.பி.என்., இல்லாமல் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மொத்தம், 152 நாடுகளில் பயன்படுத்த அனுமதி கிடைத்துள்ளது. தற்போது வரை, 600 பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். வீடியோ கால், சேட் கலர், தீம்ஸ், ஸ்டிக்கர்ஸ், குரூப் சேட், தீம் செட்டிங்க்ஸ் உள்பட, வாட்ஸ்ஆப் போன்று அனைத்து வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன.இவ்வாறு மாணவர் தெரிவித்தார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups