நீட் தேர்வுக்கு தயாரான மாணவன், கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிர் காக்கும் மருத்துவர்களைத் தேர்வு செய்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட நீட் தேர்வு, தமிழகத்தில் உயிர்பலி வாங்கி வருகிறது. 4 ஆண்டுகளுக்கு முன்பு நீட் தேர்வால் உயிரிழந்த ஏழைச்சிறுமி அனிதாவின் மரணம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியதை யாரும் மறந்திருக்க முடியாது. அந்த நீட் தற்கொலையால் ஏற்பட்ட காயம், இன்னும் பலர் நெஞ்சில் வடுவாக இருக்கும் நிலையில், தமிழகத்தில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர்கள் பலர் தற்கொலை செய்து வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே எலந்தங்குழி கிராமத்தைச் சேர்ந்தவன் மாணவன் விக்னேஷ். 19 வயதாகும் இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வுக்காக பயின்று வந்துள்ளார். இந்நிலையில், கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நீட் தேர்வுகள் செப்டம்பர் 13ம் தேதி நடைபெறும் என்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது.இந்த தேர்வை ஒத்தி வைக்கக் கோரி பலரும் வழக்குகள் தொடர்ந்துள்ள நிலையில், உச்சநீதிமன்றம் திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும் என்று மட்டும் மீண்டும் மீண்டும் அழுத்தமாகத் தெரிவித்தது.
இந்நிலையில்,நீட் தேர்வுக்காக தயாராகி வந்த மாணவன் விக்னேஷ் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.தேர்வு அழுத்தம் காரணமாக அவர் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தற்கொலை குறித்து காவல்துறையினர் விசாரணையத் தொடக்கியுள்ளனர். அனிதா, ரித்து, வைஷியா,சுபஸ்ரீ என தமிழகத்தில் நீட்டால் உயிரிழந்த மாணவர்களின் பட்டியலில் தற்போது விக்னேஷும் இணைந்துள்ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups