ஊரடங்கு தளர்வு காரணமாக, நுாலகங்கள் செயல்படத் துவங்கி விட்டன. சிவில் சர்வீசஸ் மற்றும் போட்டித்தேர்வுகளுக்கு படிக்க, நேரம் போதவில்லை என்பதால், நுாலகங்களை முழு நேரமும் செயல்பட அனுமதிக்க வேண்டும் என, போட்டி தேர்வர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்த அனைத்து நுாலகங்களும், கடந்த 1ம் தேதி முதல் திறக்கப்பட்டுள்ளன.
கோவை மாவட்ட மைய நுாலகம் திறக்கப்பட்டதால் வாசகர்களும், போட்டித் தேர்வுக்கு படிப்பவர்களும், மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.முதல் தேதியன்று நுாலகங்கள் திறந்தபோது, வைரஸ் தொற்று அச்சம் காரணமாக, கோவை மைய நுாலகத்துக்கு, 45 வாசகர்கள் மட்டுமே வந்திருந்தனர். கடந்த எட்டு நாட்களில், இந்த எண்ணிக்கை, 100 ஆக அதிகரித்துள்ளது.
இப்போது ஐ.ஏ.எஸ்., உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் மற்றும் அரசு பணி போட்டித்தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்கள் மட்டுமே, நுாலகத்துக்கு படிக்க வருகின்றனர். மேல் தளத்தில் உள்ள, போட்டி தேர்வுக்கான சிறப்பு பகுதியில் மட்டும், போட்டித் தேர்வர்கள் அமர்ந்து படிக்க அனுமதிக்கப்படுகிறது.தரை தளத்தில் தேர்வுக்கு தேவையான, சொந்த புத்தகங்களை கொண்டு வந்து படிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கதை, கவிதை, கட்டுரைகள், வார இதழ்கள் மற்றும் செய்தி தாள்கள் படிக்க அனுமதி இல்லை. நுாலக உறுப்பினர்கள் நுால்களை, வீட்டுக்கு எடுத்து சென்று படிக்கலாம்.கூடுதல் நேரம் வேண்டும்நுாலகம் காலை, 8:00 முதல் பிற்பகல் 2:00 மணி வரை மட்டுமே செயல்படுகிறது.
போட்டித்தேர்வுகள் நெருங்குவதால், தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் நேரம் போதவில்லை என, புலம்புகின்றனர். அதனால், வழக்கம்போல் நுாலகம் முழுநேரமும் செயல்பட, அனுமதி அளிக்க வேண்டும் என, வேண்டுகோள் விடுத்துள்ளனர்.கோவை மாவட்ட மைய நுாலக நுாலகர் ராஜேந்திரனிடம் கேட்டதற்கு, ''காலை 8:00 முதல் பகல் 2:00 மணி வரை மட்டுமே, நுாலகத்தை திறந்து வைத்திருக்க வேண்டும் என, அரசு வழிகாட்டு நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு தரப்பில் இருந்து மறு உத்தரவு வரும் வரை, இந்த நேரத்தில் மட்டுமே நுாலகம் செயல்படும். வாசகர்களின் கோரிக்கையை மேல் அதிகாரிகளுக்கு தெரிவித்து இருக்கிறேன்,'' என்றார்.பார்ப்போமே...நுாலகத்தை நம்பியுள்ள ஏழை மாணவர்களுக்கு, அரசு உதவுகிறதா என்று!நுாலகம் காலை, 8:00 முதல் பிற்பகல் 2:00 மணி வரை மட்டுமே செயல்படுகிறது. போட்டித்தேர்வுகள் நெருங்குவதால், தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் நேரம் போதவில்லை என, புலம்புகின்றனர். அதனால், வழக்கம்போல் நுாலகம் முழுநேரமும் செயல்பட அனுமதி அளிக்க வேண்டும் என, வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
'ஏழை மாணவர்களுக்குவசதியாக இருக்கும்'ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு தயாராகி வரும் கவுதம் கூறுகையில், ''யு.பி.எஸ்.சி., தேர்வுக்கு, இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ளது. நுாலகம் பகுதி நேரம் மட்டும் செயல்படுவதால், படிக்க நேரம் போதவில்லை. வீட்டில் இருந்து படிக்க இடவசதி இல்லை. அதனால் நுாலகம் முழு நேரமும் செயல்பட்டால்தான், என்னை போன்ற ஏழை மாணவர்கள், தேர்வுக்கு தயாராக முடியும்,'' என்றார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups