பிடித்தம் செய்வதற்கு ஏற்பதான் இனி பிஎப் பென்ஷன் கிடைக்கும் - தற்போதைய திட்டத்தை கைகழுவுகிறது மத்திய அரசு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, September 05, 2020

பிடித்தம் செய்வதற்கு ஏற்பதான் இனி பிஎப் பென்ஷன் கிடைக்கும் - தற்போதைய திட்டத்தை கைகழுவுகிறது மத்திய அரசு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தற்போதைய முறையில் பிஎப் பென்ஷன் குறிப்பிட்ட கணக்கீட்டின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது.
* ரூ15,000 உச்சவரம்பு இன்றி, அதிக சம்பளம் வாங்குவோர் அதற்கேற்ப கூடுதலாக பென்ஷன் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

* ஊழியர்கள் பணியில் இருந்து விலகி 2 ஆண்டுகளுக்கு பிறகு பிஎப் தொகையை முழுமையாக எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

* புதிய திட்டத்தில் ஊழியர்களின் பங்களிப்பிற்கு ஏற்ப, அவரவர் பென்ஷன் தொகை வரையறை செய்யப்படும்.
தற்போது நடைமுறையில் உள்ள பிஎப் பென்ஷன் திட்டத்தை கை கழுவிவிட்டு, புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி, ஊழியர்கள் பங்களிப்பு தொகைக்கு ஏற்பதான் பென்ஷன் தொகை முடிவு செய்யப்படும். பிஎப் விதிகளின்படி, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு நிறுவனம் 12 சதவீத பங்களிப்பு அளிக்கிறது. இதில் 8.33 சதவீதம் ஓய்வூதியத்துக்கு செல்கிறது. மாதச்சம்பளம் ரூ15,000 வாங்கும் ஊழியர்கள் இதற்கு தகுதி உடையவர்கள். 1995ம் ஆண்டு சட்ட திருத்தத்தின்படி ஓய்வூதியத்துக்கான பிடித்தம் நிறுவனங்களின் பங்களிப்பிலிருந்து 8.33 சதவீதமாக பிடிக்க வகை செய்தது. இருப்பினும் அதிகபட்ச பங்களிப்பு ரூ1,250 மட்டுமே. இந்நிலையில், புதிய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: தற்போதைய திட்டத்தில் பிஎப் பென்ஷன் பெற ஊழியர்கள் 10 ஆண்டுகள் பணியில் இருந்திருக்க வேண்டும். அவர்களின் பங்களிப்புக்கு ஏற்ப அல்லாமல், குறிப்பிட்ட கணக்கீட்டின் அடிப்படையில் பென்ஷன் தொகை நிர்ணயம் செய்யப்படும். புதிய திட்டத்தின்படி, ஒவ்வொரு ஊழியருக்கும் தனி பென்ஷன் கணக்கு இருக்கும். இதில், ஊழியர்களின் பங்களிப்பு எவ்வளவோ அதற்கேற்ப அவருக்கான பென்ஷன் தொகை நிர்ணயம் செய்யப்படும். இதற்கு ஏற்ப பிஎப் சட்ட விதிகளில் திருத்தம் கொண்டுவரவும் பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன. இந்த மாதம் 9ம் தேதி, பிஎப் மத்திய வாரிய அறக்கட்டளை கூட்டம் டெல்லியில் நடக்கிறது. மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்க்வார் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், மேற்கண்ட திட்டம் குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது. இந்த புதிய திட்டம், நிறுவனங்களில் புதிதாக சேரும் ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றனர். இந்த திட்டம் குறித்து, பாரதிய மஸ்தூர் சங்கத்தின் பொதுச்செயலாளர் விரேஷ் உபாத்யாய் கூறுகையில், ‘‘புதிய திட்டத்தில் ஊழியர்கள் அதிகமாக பங்களிப்பு செய்தால், அதிக பென்ஷன் கிடைக்கும். இதனால், அதிக சம்பளம் வாங்கும் தனியார் நிறுவன ஊழியர்கள் இந்த திட்டத்தால் கூடுதல் பலன் பெற முடியும்’’ என்றார். தற்போது பிஎப் திட்டத்தில் பங்களிப்பு செய்ய மாத சம்பளம் ₹15,000 வரை தான் கணக்கிடப்படுகிறது. புதிதாக அறிமுகம் செய்யும் திட்டத்தில் இந்த வரம்பு இருக்காது. சம்பள உச்சவரம்பு இன்றி 8.33 சதவீதத்தை பென்ஷன் பங்களிப்பாக முதலீடு செய்ய புதிதாக கொண்டுவரப்பட உள்ள திருத்தம் வகை செய்யும் என மத்திய அரசு வட்டாரத்தில் கூறப்படுகிறது. கடந்த மார்ச் மாத நிலவரப்படி, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் தற்போது 2 கோடி சந்தாதாரர்கள் பிஎப் திட்டத்தில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews