தமிழ்நாடு அமைச்சுப்பணி இளநிலை உதவியாளர் / தட்டச்சர்கள் சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை 3 ஆகியோர்களுக்கு உதவியாளராகப்பதவி உயர்வு - பணிமாறுதல் வழங்குவது - 15.03.2020 நிலவரப்படி தகுதி பெற்றவர்கள் தற்காலிகத் தேர்ந்தோர் பெயர்ப் பட்டியல் வெளியிடுதல் சார்பு - தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் - நாள். 01.09.2020 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, September 04, 2020

தமிழ்நாடு அமைச்சுப்பணி இளநிலை உதவியாளர் / தட்டச்சர்கள் சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை 3 ஆகியோர்களுக்கு உதவியாளராகப்பதவி உயர்வு - பணிமாறுதல் வழங்குவது - 15.03.2020 நிலவரப்படி தகுதி பெற்றவர்கள் தற்காலிகத் தேர்ந்தோர் பெயர்ப் பட்டியல் வெளியிடுதல் சார்பு - தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் - நாள். 01.09.2020

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள், சென்னை. 600 006.
நக, எண்.18270/அ4/இ3/2020, நாள். 01 092020.
பொருள் :
தமிழ்நாடு அமைச்சுப் பணி இளநிலை உதவியாளர் / தட்டச்சர்கள் சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை 3 ஆகியோர்களுக்கு உதவியாளராகப்பதவி உயர்வு - பணிமாறுதல் வழங்குவது - 15.03.2020 நிலவரப்படி தகுதி பெற்றவர்கள் தற்காலிகத் தேர்ந்தோர் பெயர்ப் பட்டியல் வெளியிடுதல் சார்பு.
பார்வை:
1. தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 18270/04/இ3/2020, நான். 16.03.2020 மற்றும் 30.07.2020.
2. தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 15589/04/இ3/2019, நாள்.19.08.2019 மற்றும் 21.11.2019

மேற்காண் பொருள் சார்பாக பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்கள் / தட்டச்சர்களுக்கு உதவியாளர் பதவி உயர்வு மற்றும் சுருக்கெழுத்துத் தட்டச்சர் நிலை-IIIலிருந்து உதவியாளர்களாகப் பணி மாறுதல் வழங்குதல் சார்ந்தும் 15.03.2020 நிலவரப்படி உதவியாளர் பதவி உயர்வு பெறுவதற்குத் தகுதிவாய்ந்த நபர்கள் விவரங்களை அனுப்பி வைக்குமாறு பார்வை (1)ல் காணும் 16.03.2020 நாளிட்ட இவ்வலுவலக செயல்முறைகளின் மூலம் அனைத்து அலுவலர்கள் / முதன்மைக் கல்வி அலுவலர்களையும் கேட்டுக் கொள்ளப்பட்டது. மேற்கண்டவாறு கோரப்பட்டத்தில் சில மாவட்டங்களிலிருந்து கருத்துருக்கள் பெறப்படாமல் உள்ளது. மேலும் தற்காலிகத் தேர்ந்தோர் முன்னுரிமைப் பட்டியல் தயாரித்ததில் கீழ்க்கண்டவாறு தனித்தனியாக பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

1. 15.03.2020 நிலவரப்படி உதவியாளர் பதவி உயர்வுக்குத் முன்னுரிமைப் பட்டியல்
2. சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை IIlலிருந்து உதவியாளராகப் பணிமாறுதல் பெறத் முன்னுரிமைப் பட்டியல்
அலுவலர்களுக்கும், முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலமாக இதர அலுவலர்களுக்கும் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. மேற்காண் முன்னுரிமைப் பட்டியலில் 02112012 வரை நியமனம் பெற்றவர்களில் தகுதியுடைய தனியர்களின் விவரங்கள் ஏதேனும் விடுபட்டிருந்தாலோ, அல்லது புதிதாக சேர்க்கப்பட வேண்டிய தகுதியுபைய பணியாளர்கள் இருந்தாலோ, திருத்தங்கள் இருந்தாலோ அவ்விவரங்களை 11.09.2020க்குள் உரிய அலுவலர் மூலம் உரிய படிவத்தில் அனுப்பி வைக்கும்படி அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.மேலும், இப்பட்டியலினைப் பெற்றுக் கொண்டமைக்கு ஒப்புதலினை உடன் இவ்வலுவலகத்திற்குத் தெரிவிக்கும்படியும் சார்ந்த அலுவலர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். இணைப்பு: தற்காலிகத் தேர்ந்தோர் முன்னுரிமை பெயர்ப் பட்டியல்
ஒம் -சு.நாகராஜமுருகன்,
இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி)
பெறுநர்
அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள்
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews