தொடக்கக்கல்வி - 2020 - 2021 ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை - EMIS இணையதளத்தில் சேர்க்கையான மாணவர் விவரங்களை பதிவேற்றம் செய்தல் - அறிவுரைகள் வழங்குதல் - சார்ந்து - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - நாள். 03.09.2020 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, September 04, 2020

தொடக்கக்கல்வி - 2020 - 2021 ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை - EMIS இணையதளத்தில் சேர்க்கையான மாணவர் விவரங்களை பதிவேற்றம் செய்தல் - அறிவுரைகள் வழங்குதல் - சார்ந்து - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - நாள். 03.09.2020

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை -6
ந.க.எண்.004577 /ஜெ2/2020 நாள். 03.09.2020
பொருள் -- தொடக்கக் கல்வி - 2020 - 2021 ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை - EMIS இணையதளத்தில் சேர்க்கையான மாணவர் விவரங்களை பதிவேற்றம் செய்தல் - அறிவுரைகள் வழங்குதல் - சார்ந்து.

பார்வை
1. அரசாணை (1டி) எண்.273, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை (பே.மே.4)த்துறை , நாள்.13.08.2020.
2. சென்னை - 6, தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், ந.க.எண்.4577/ஜெ2/2020, நாள்.13.08.2020. பார்வை 1ல் காணும் அரசாணையில் 2020 - 21-ஆம் கல்வியாண்டுக்கான அரசு / அரசு உதவி பெறும் / தனியார் பள்ளிகளில் 1,6,9 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் புதிய மாணவர் சேர்க்கை மற்றும் இதர வகுப்புகளில் பள்ளி மாறுதலின் காரணமாக மாணவர் சேர்க்கை செய்திடுதல் மற்றும் கல்விசார்ந்த விலையில்லா பொருட்களை அரசு / அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்குதலுக்கு அனுமதியும் புதிய மாணவர் சேர்க்கையின் போது பின்பற்ற வேண்டிய பொதுவான நெறிமுறைகள் மற்றும் நிலையான செயல்பாட்டு வழிமுறைகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் பார்வை 2ல் காணும் தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகளில் மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்காண் அரசாணையில் தெரிவிக்கப்பட்ட தகவலுக்கிணங்க 17.08.2020ஆம் தேதி முதல் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அவ்வாறு சேர்க்கை செய்யப்பட்டுள்ள மாணவர் தொடர்பான விவரங்களை கல்வித் தகவல் மேலாண்மை முறைமை (EMIS) இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கு பின்வரும் அறிவுரைகளைப் பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
புதிய மாணவர் சேர்க்கை

> பிற மாநிலத்திலிருந்து / ஒன்றாம் வகுப்பில் முதன்முறையாக சேர்க்கை ஆகும் மாணவர்களுக்கு புதிய Student Profile உருவாக்கப்பட வேண்டும்.
- பெற்றோர்களால் வழங்கப்பட்ட ஆவணங்கள் | தகவல்களின் அடிப்படையில் முதற்கட்ட விவரங்களை உள்ளீடு செய்தல் வேண்டும். கூடுதலாக தேவைப்படும் விவரங்களைப் பின்னர் பெற்று உள்ளீடு செய்தல் வேண்டும்.

ஏதேனும் ஒரு பள்ளியில் ஏற்கனவே பயின்று வரும் மாணவர்களின் மாறுதல் சேர்க்கை
- 2019 - 2020 ஆம் கல்வி ஆண்டில் 1 முதல் 7ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவர்கள் 2020 - 2021 ஆம் கல்வியாண்டிற்கு அடுத்தடுத்த வகுப்புகளுக்கு Promotion செய்தல் வேண்டும். அதாவது 1ஆம் வகுப்பு மாணவர்களை 2 ஆம் வகுப்பிற்கும், 2ஆம் வகுப்பு மாணவர்களை 3ஆம் வகுப்பிற்கும், EMIS இணையதளத்தில் நிலை உயர்த்த வேண்டும்.

ஏதேனும் ஒரு பள்ளியில் ஏற்கனவே சேர்க்கை செய்யப்பட்டு பயின்று வரும் மாணவர்களில் யாரேனும் வேறு பள்ளிகளில் பயில்வதற்காக மாற்றுச் சான்றிதழ்கள் கோரும் பட்சத்தில் கல்வித் தகவல் மேலாண்மை முறைமை (EMIS) இணையதளத்தில் ஏற்கனவே உள்ளீடு செய்யப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் சார்ந்த தற்போதைய பள்ளியால் மாற்றுச் சான்றிதழ் நிரப்பப்படல் வேண்டும்.

> உரிய காரணங்களைக் குறிப்பிட்டு தற்போதைய பள்ளி இம்மாணவர்களின் விவரங்களை Common Poolக்கு மாற்றுதல் வேண்டும். சேர்க்கை மேற்கொள்ளும் புதிய பள்ளியானது இம்மாணவர்களின் விவரங்களை EMIS Id | ஆதார் எண் / கைபேசி எண் ஆகியவற்றினைக் கொண்டு Common Poolலில் இருந்து தேடி எடுத்தல் வேண்டும்.

< அவ்வாறு Common Poolலில் இருந்து தேடி எடுக்கப்பட்ட விவரங்களின் அடிப்படையில் புதிய பள்ளியானது மாணவர் சேர்க்கையினை மேற்கொள்ள வேண்டும்.

ஒரு மாணவனுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட EMIS Id எண் உருவாக்கப்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, தமிழ்நாட்டிற்குள் மாறுதலில் சேர்க்கையாகும் எந்த மாணவருக்கும் புதிதாக EMIS Id-ஐ எந்த பள்ளியும் உருவாக்கித் தருதல் கூடாது -

தொடக்கக் கல்வி இயக்குநர்
CLICK HERE TO DOWNLOAD DEE PRO PDF 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews