'செமஸ்டர்' கட்டணம் கோரிய பல்கலை ., உத்தரவு எதிர்த்து மனு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, September 04, 2020

'செமஸ்டர்' கட்டணம் கோரிய பல்கலை ., உத்தரவு எதிர்த்து மனு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
'செமஸ்டர்' கட்டணங்களை செலுத்தாத மாணவர்களின் பெயர் நீக்கப்படும் என்ற அண்ணா பல்கலையின் அறிவிப்பை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்திய மாணவர்கள் சம்மேளனத்தின், மாநில பொதுச்செயலர் மாரியப்பன் மற்றும் கவியரசு தாக்கல் செய்த மனு:அண்ணா பல்கலை தரப்பில், 2020 ஆக., 5ல் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், 'செமஸ்டர் கட்டணத்தை, செப்.,3 மற்றும் 5ம் தேதிக்குள் மாணவர்கள் செலுத்த வேண்டும்.'செலுத்தாதவர்களின் பெயர்கள், அறிவிப்பு பலகையில், 7ம் தேதி வெளியிடப்படும்; பின், மாணவர்களின் பெயர், பட்டியலில் இருந்து நீக்கப்படும்' என, கூறப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில், மாணவர்கள் அனைவரும், 'ஆன்லைன்' வகுப்புகளில் கலந்து கொள்கின்றனர். கணினி கட்டணம், சோதனைக்கூடம் கட்டணம் என, இதர வகைகளில் கட்டணங்கள் நிர்ணயிக்கப் பட்டுள்ளன. கட்டணம் செலுத்தவில்லை என்றால், பெயர்களை நீக்கி விடுவோம் என்பது, மாணவர்களின் நலனுக்கு எதிரானது.எனவே, அண்ணா பல்கலை சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும். மாணவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்க, தடை விதிக்க வேண்டும்.கல்வி கட்டணம் தவிர்த்து செமஸ்டர் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். கட்டணம் செலுத்த, போதிய அவகாசம் வழங்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.இம்மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன், வழக்கறிஞர் திருமூர்த்தி முறையிட்டார். மனுவை, இன்று விசாரிப்பதாக நீதிபதி தெரிவித்தார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews