பள்ளிக் கல்வி - 2020 - 2021 ஆம் கல்வியாண்டுக்கான அரசு / அரசு உதவி பெறும் / தனியார் பள்ளிகளில் 1, 6, 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் புதிய மாணவர் சேர்க்கை மற்றும் இதர வகுப்புகளில் பள்ளி மாறுதலின் காரணமாக மாணவர் சேர்க்கை செய்திடுதல் மற்றும் கல்வி சார்ந்த விலையில்லா பொருட்களை அரசு / அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்குதலுக்கு அனுமதி - புதிய மாணவர் சேர்க்கையின் போது பின்பற்ற வேண்டிய பொதுவான நெறிமுறைகள் மற்றும் நிலையான செயல்பாட்டு வழிமுறைகள் (Standard Operating Procedure) - ஆணைகள் - வெளியிடப்படுகிறது.
வருவாய் (ம) பேரிடர் மேலாண்மை (பே.மே.4)த்துறை அரசாணை (1டி) எண். 273
நாள்: 13.08.2020
சார்வரி-ஆடி 29, திருவள்ளுவர் ஆண்டு, 2051
படிக்க:
1. அரசாணை (நிலை) எண்.344 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை - (பே.மே-II) துறை, நாள் 10.7.2020
2. அரசாணை (நிலை) எண். 396 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை (பே.மே-II) துறை, நாள் 30.7.2020
3. பள்ளிக் கல்வி இயக்குநரின் கடித ந.க. எண். 23430/கே/இ1/2020, நாள். 05.08.2020.
4. தொடக்கக் கல்வி இயக்குநரின் கடித ந.க.எண்.4577/ஜே2/2020, - நாள். 06.08.2020.
5. மெட்ரிக்குலேசன் பள்ளி இயக்குநரின் கடித ந.க. எண். 1000/சி1/2020, - நாள். 26.06.2020
6. மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு நாள் 11.08.2020 ஆணை:
மேலே இரண்டாவதாக படிக்கப்பட்ட அரசாணையில் COVID-19 நோய் தொற்றின் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள், பள்ளி நிறுவனங்கள் மற்றும் பயிற்சி நிறுவனங்கள் மறு உத்தரவு வரும் வரை செயல்பட கூடாது என ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
2) மேலே மூன்றாவதாக படிக்கப்பட்ட கடிதத்தில் பள்ளிக் கல்வி இயக்குநர், 2020-21 ஆம் கல்வியாண்டில் கோவிட்-19 காரணமாக தற்போது பள்ளிகள் செயல்படாத நிலை உள்ளது. இக்கல்வியாண்டிற்கு தேவையான அனைத்து பாடநூல்களும் தமிழ்நாடு பாடநூல் கழத்தின் மூலம் அச்சிடப்பட்டு மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இக்கல்வியாண்டில் குறிப்பாக பொதுத் தேர்வினை எதிர் கொள்ள இருக்கும் 12 ஆம் வகுப்பு மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடநூல்கள் வழங்கப்பட்டு விட்டன. அதனை தொடர்ந்து, தற்போது 2,3,4,5,7 மற்றும் 8 ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு பாடநூல்கள் மற்றும் புத்தகப்பை, நிலையான செயல்பாட்டு வழி முறைகளை பின்பற்றி வழங்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், புதிய மாணவர் சேர்க்கைக்கான வரைவு நிலையான செயல்பாட்டு வழிமுறைகளுக்கு (Standard Operating Procedure) ஒப்புதல் வேண்டி அரசுக்கு அனுப்பியுள்ளார்.
3) மேலும், பள்ளிக் கல்வி இயக்குநர் தனது கடிதத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் குறிப்பாக 1, 6 மற்றும் 9 ஆம் வகுப்புகளில் புதிதாக மாணவர் (New admissions) சேர்க்கை செய்யவும் பிற வகுப்புகளுக்கு தேவை ஏற்படின் பள்ளி மாறுதலில் வரும் சில மாணவர்களுக்காக புதிய மாணவர் சேர்க்கை செய்யவும் அவர்களுக்குரிய விலையில்லா பாடநூல்கள், நோட்டுபுத்தகங்கள், புத்தகப்பை மற்றும் சீருடை வழங்க அனுமதி வழங்குமாறு அரசை கேட்டுக் கொண்டுள்ளார். 4) மேலே நான்காவதாக படிக்கப்பட்ட கடிதத்தில் தொடக்கக் கல்வி இயக்குநர் கொரானா COVID-19 நோய் தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் திறப்பு கால தாமதம் ஆகியுள்ள நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை தொடங்குதல் சார்ந்து கடைபிடிக்க வேண்டிய வரைவு பொதுவான நெறிமுறைகளை அரசுக்கு ஒப்புதல் வேண்டி அனுப்பியுள்ளார்.
5) மேலும், மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் 11.08.2020 அன்று அளித்துள்ள பத்திரிக்கைச் செய்தியில் அனைத்து பள்ளிகளிலும் 1,6,9-ம் வகுப்புகளுக்கான 2020-2021-ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையும், ஒரு பள்ளியில் இருந்து மற்றொரு பள்ளிக்கு மாறுவதன் காரணமாக பிற வகுப்புகளுக்கான (2 முதல் 10ம் வகுப்பு) மாணவர் சேர்க்கையும் வருகிற 17.08.2020 தேதி முதல் நடைபெறும் எனவும் அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் 11-ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை வருகிற 24.08.2020 தேதி முதல் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளார்கள்.
6) பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் கருத்துருவினை அரசு நன்கு ஆய்வு செய்து அதனை ஏற்று அரசு / அரசு உதவி பெறும் / தனியார் பள்ளிகளில் குறிப்பாக 1, 6 மற்றும் 9 ஆம் வகுப்புகளுக்கு மற்றும் பள்ளி மாறுதலில் வரும் சில மாணவர்களுக்கு பிற வகுப்புகளுக்கும் (2 முதல் 10 ஆம் வகுப்பு) 17.08.2020 லிருந்து புதிதாக மாணவர் (New admissions) சேர்க்கை செய்யவும், 11 ஆம் வகுப்புக்கு 24.08.2020 முதல் புதிய மாணவர் சேர்க்கை செய்யவும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் புதிய சேர்க்கை செய்யும் நாளில் அவர்களுக்குரிய அரசு வழங்கும் விலையில்லா பாடநூல்கள், நோட்டுபுத்தகங்கள், புத்தகப்பை, சீருடை மற்றும் இதர கல்வி சார் பொருட்களை அரசாணை (நிலை) எண்.344 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை (DM-II) துறை, நாள். 10.7.2020-யில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையான செயல்பாட்டு வழிமுறைகளைப் (Standard Operating Procedure) பின்பற்றி வழங்கவும் அப்பள்ளிகளுக்கு அனுமதி வழங்கியும், 17.08.2020 முதல் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009, சட்டப் பிரிவு 12(1) (சி)ன்படி சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு 25 விழுக்காடு இடஒதுக்கீடுக்கான சேர்க்கைக்கான நடைமுறையினை (Admission process) இணையதள மூலமாக தொடங்கிட மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநருக்கு அனுமதி வழங்கியும் அரசு ஆணையிடுகிறது. 7) இவ்வரசாணையுடன் அரசு / அரசு உதவி பெறும் / தனியார் பள்ளிகளில் புதிய மாணவர் சேர்க்கையின் (New admissions) போது பின்பற்ற வேண்டிய பொதுவான நெறிமுறைகள் (இணைப்பு-1) மற்றும் அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கையின் போது கடைபிடிக்க (Standard Operating வேண்டிய நிலையான செயல்பாட்டு வழிமுறைகள் Procedure) (இணைப்பு -II) ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன. (ஆளுநரின் ஆணைப்படி)
க.சண்முகம்
அரசு தலைமைச் செயலாளர்.
பெறுநர் முதன்மைச் செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர், சென்னை 600005
அரசு செயலாளர், பள்ளிக் கல்வித்துறை, தலைமைச் செயலகம், சென்னை 600 009
பள்ளிக் கல்வி இயக்குநர், சென்னை 600 006
தொடக்கக்கல்வி இயக்குநர், சென்னை 600 006
மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குநர், சென்னை 600 006
திட்ட இயக்குநர், ஒருங்கிணைந்த கல்வி, சென்னை 600 006
தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், சென்னை 600 006
நகல்
மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் சிறப்பு நேர்முக உதவியாளர் சென்னை 600 009 அரசு தலைமைச் செயலாளரின் தனிச்செயலாளர்
இணைப்பு -1
அரசு / அரசு உதவி பெறும் / தனியார் பள்ளிகளில் புதிய மாணவர் சேர்க்கையின் (New admissions) போது பின்பற்ற வேண்டிய பொதுவான நெறிமுறைகள்
1. தொடக்கப் பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கும் நடுநிலைப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கும் மாற்றுச் சான்றிதழ்கள் (TC-Transfer Certificate) வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களால் எடுக்கப்பட்டு மாற்றுச் சான்றிதழ்கள் (TC-Transfer Certificate) முன்கூட்டியே தயாரிக்கப்பட்டு, தயார் நிலையில் வைத்திருக்கப்பட வேண்டும்.
2. ஒவ்வொரு வகுப்பிற்கும் குறிப்பிட்ட நாளை ஒதுக்கீடு செய்து சமூக இடைவெளியை பின்பற்றி மாற்றுச் சான்றிதழ்கள் (TC - Transfer Certificate) வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்கூட்டியே திட்டமிட்டு தலைமை ஆசிரியர்கள் எடுக்க வேண்டும்.
3. தொடக்க / நடுநிலை பள்ளிகளில் 5-ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு 6-ஆம் வகுப்பிலும், 8-ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு 9-ஆம் வகுப்பிலும் நடுநிலை, உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் சேர்க்கை நடைபெறவேண்டும். இதற்காக இப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளியில், மாணவர்கள் சேர உள்ள ஊட்டுப் (Feeder school) பள்ளிகளின் பட்டியலை தயார் செய்து வைத்து கொள்ள வேண்டும்.
4. அப்பள்ளிகளில் 5 / 8 ஆம் வகுப்புகள் பயின்ற மாணவர்களின் பட்டியல் TNEMIS இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து வைத்து கொள்ள வேண்டும் அல்லது ஊட்டுப்பள்ளி (Feeder school) தலைமையாசிரியரிடம் இருந்து பட்டியல் பெற்றுக் கொள்ள வேண்டும்.
5. தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது ஊட்டுப் பள்ளிகளில் (Feeder School) ஐந்தாம் வகுப்பு / எட்டாம் வகுப்பு பயின்ற மாணவர்களின் பெற்றோர்களது கைபேசி/ தொலைபேசி எண்கள் மற்றும் வீட்டு முகவரி ஆகியவற்றை தொடக்க / நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களிடம் இருந்து சேகரித்துக் கொள்ள வேண்டும். 6. அவ்வாறு பெற்ற கைபேசி / தொலைபேசி எண்கள் மற்றும் வீட்டு முகவரிகளில் உள்ள பெற்றோர்களை நேரடியாக தொடர்பு கொண்டு அம்மாணவர்களைப் தமது பள்ளியில் ஒவ்வொரு வகுப்பிற்கும் குறிப்பிட்ட நாட்களில் ஆறாம் / ஒன்பதாம் வகுப்பில் சேர்க்கை செய்வதற்கு தலைமை ஆசிரியர்களால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இதனை ஊட்டுப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் வாயிலாகவும் பெற்றோருக்கு தெரியப்படுத்தலாம்.
7. ஊட்டுப் பள்ளியில் அதிக மாணவர்கள் இருப்பின் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒரு நாளைக்கு காலையில் 20 மாணவர்கள் / பெற்றோர்கள் பிற்பகலில் 20 மாணவர்கள் / பெற்றோர்கள் என அழைத்து மாணவர் சேர்க்கை செய்திட வேண்டும்.
8. மாணவர் சேர்க்கை அதிகளவில் இருக்கும் பட்சத்தில் தேவைக்கு ஏற்ப கூடுதல் நாட்களையும் ஒதுக்கீடு செய்து மாணவர் சேர்க்கையினை நடத்திடல் வேண்டும்.
9. மாணவர் சேர்க்கை செய்திட தங்கள் பள்ளியில் அனைத்து முன்னேற்பாடுகளையும் தலைமையாசிரியர்கள் உரிய வகுப்பாசிரியர்கள் கொண்டு செய்து முடிக்க வேண்டும். பள்ளியில் சேர உரிய ஆவணங்களில் ஏதேனும் ஒரு ஆவணம் இல்லையெனினும் சேர்க்கை செய்து பின்னர் அச்சான்றுகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.
10. மேலே வரிசை எண்: 1-9ல் உள்ள அனைத்து நெறிமுறைகளும் 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கும் பொருத்தமான வகையில் பின்பற்றப்பட வேண்டும். 11. தலைமையாசிரியர்கள் பெற்றோர்களிடம் இருந்து உரிய விண்ணப்பம் பெற்று உடன் 1 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை செய்திட வேண்டும். 1 ஆம் வகுப்பில் சேர உள்ள மாணவர்கள் நேரில் வருகை புரியவில்லை என்றாலும் பெற்றோர்கள் தரும் ஆவணங்கள் அடிப்படையில் பள்ளித் தலைமையாசிரியர்கள் மாணவர் சேர்க்கை செய்திட வேண்டும்.
12. 1, 6, 9 மற்றும் 11ஆம் வகுப்புகள் மற்றும் பிற வகுப்புகளில் பள்ளி மாறுதலில் வரும் மாணவர்களுக்கு புதிய மாணவர் சேர்க்கை செய்திட தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளியில் அறிவிப்பு பலகையில் குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும். அந்த குறிப்பிட்ட நாளில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
13. மாணவர் சேர்க்கை தொடங்குவதற்கு இரு தினங்களுக்கு முன்னரே, பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிக்கு வருகை புரிந்து, பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய துாய்மைப் பணிகள் மற்றும் சுகாதாரப் பணிகளை முடித்து பள்ளி முறையாக செயல்படுவதற்கு தயார் நிலையில் வைத்திருக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
14. புதிய மாணவர் சேர்க்கை நடைபெறும் நாளிலேயே அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவர்களுக்கான விலையில்லா புத்தகங்கள், புத்தகப்பை, சீருடைகள் மற்றும் ஏனைய கல்விசார் விலையில்லா பொருட்கள் அரசாணை (நிலை) எண். 344, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை (DM-II) துறை, நாள் 10.7.2020 - ல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையான செயல்பாட்டு வழிமுறைகளைப் (SOP) பின்பற்றி வழங்கப்பட வேண்டும். Annexure - II Standard Operating Procedure (SOP) for new admission of students in schools during with regard to COVID-19 Pandemic prevention Introduction:
The Government has decided to start admission of students in classes 1,6, 9 and 11 and other classes (as required) in current academic year 2020-21 in Government and Government aided schools and to distribute the cost free educational items to the students, to help them to learn their lessons from their homes during this lockdown period due to COVID-19. The Government has already issued Standard Operating Procedure for distribution of Textbooks and other educational items vide G.O. Ms. No.344 Revenue and Disaster Management (DMII) Department dated 10.07.2020. The Government now issue the following Standard Operating Procedure (SOP) for admission process for classes 1,6,9 & 11 and other classes in all schools in Tamil Nadu with regard to COVID-19 Pandemic prevention.
I Social Distancing norms
1. New Admissions for students in schools shall be made according to the pre-assigned time slots to avoid queuing. Not more than 20 students/parents should be asked to come during a slot of two hours
2. Proper boxes must be marked on the floor/ground to ensure social distancing in the queue.
3. The students/parents must come for admission wearing a face mask. On the days of the new admission in schools, social distancing norms shall be followed to avoid crowding at the gate.
4. The students shall not be allowed to linger outside the schools. 5. Students/parents in containment zones and quarantine due to travel shall be asked to come to school for admission after the quarantine/containment period is over or the containment zone is
7. declared normal. The initial process of admissions can be done over phone for these students. The staff involved in the admission process must wear mask and hand gloves. Two class rooms must be earmarked as waiting halls for students/parents following social distancing norms. However, waiting of students/parents must be avoided to maximum extent. 8. II Precautionary measures and sanitization:
1. Prior to admission process, the school premises along with furniture, hand rails, doors, windows etc. shall be disinfected properly following the Government guidelines already issued for the same. This exercise should be done daily before starting the admission process and other related work.
2. Provision of hand wash facilities with soap and running water which is the most preferred mode of disinfection for hands shall be made adequately. In addition, hand sanitizers shall be provided. 3. Personnel/teachers/students/parents/guardians shall only be allowed
to enter the premises after washing their hands with soap /sanitizing. Suitable hand wash with soap /sanitization provisions shall be made at the entry and exit points of the schools and wherever required.
4. The handling staff shall disinfect his/her hands before touching the various forms / applications related to admission process.
5. CEOs shall communicate the Government guidelines for sanitization of public places to all schools / officials for strict compliance by all concerned.
6. Wash areas, toilets, etc., where people are likely to come shall be disinfected properly. Social distancing norms shall apply to such areas strictly.
7. The management of every school shall be responsible for the upkeep of their school premises according to these standards. III Social behaviour for pandemic prevention
1. The Head Master shall ensure that a clean face mask is used by all /teachers/students/ personnel involved in the work.
2. Wearing of face cover shall be compulsory in all areas of the school premises. Touching the mask should be kept to minimum.
3. Touching the face or any part of the face should be avoided.
4. Touching any surfaces of furniture/fixtures/railings/lifts/handles and other surfaces should be kept to the minimum.
5. Spitting should be strictly prohibited except in wash areas where the same should be washed away in running water immediately.
6. Social distancing shall be maintained at all places. IV Other instructions
1. All employees/teachers must compulsorily wear their Identity card at all times.
2. Employees/ teachers/students/parents should be strictly instructed not to create any gathering inside the school premises.
3. The Head Masters shall be held responsible for adherence of guidelines in school and should carry out compliance checks frequently.
V Issue of Transfer certificate in previous schools
1. All the above procedures (Para I to Para IV) shall be followed as applicable in distribution of Transfer Certificates (TC) and necessary documents to students in the schools where the students have previously studied.
VI RTE Admissions : All the above procedures (Para I to Para IV) shall be followed as applicable for admission under Section 12(1)(C) of RTE, Act, 2009 in non minority unaided schools which involves applying for admissions in the offices of the BEOS, DEOs and other related processes.
K.SHANMUGAM CHIEF SECRETARY TO GOVERNMENT 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.