ஆசிரியரின் பதிவு.
அனைவருக்கும் வணக்கம்,
கடந்த இரண்டு ஆண்டுகளாக என் குழந்தைகளை அரசு பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் என்று ஆவல் கொண்டேன். ஆனால் அரசு வேலை வரும்போது என் குழந்தைகளை நல்ல பள்ளிக்கூடத்தில், அதுவும் தனியார் பள்ளிக்கூடத்தில் நல்ல கல்வியை, எதிர்காலத்திற்கு அவன் வாழ்க்கையை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கு உகந்த பள்ளியை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ஒரு மாதத்திற்கு முன்பு சிபிஎஸ்சி இல் சேர்த்துவிட்டேன்.
ஆனால் நான் செய்தது சரியா என்ற குழப்பத்தில் இருந்து கொண்டே இருந்தேன். இடையில் 2 வீடியோ பதிவுகளை நான் கண்டேன், விழிப்புணர்வு அடைந்தேன். நாம் தவறான முடிவை எடுத்து இருக்கிறோம் என்று உணர்ந்தேன். தனியார் பள்ளியில் ஆங்கிலம் தெரிந்து மதிப்பெண் காகவே அவன் வாழ்வான், ஆனால் அரசுப் பள்ளியில் பாட அறிவை கற்றுக்கொண்டு நல்ல மனிதனாக வளர முடியும் என்பதை உணர்ந்தேன். ஆங்கில அறிவு, சிறப்பு வகுப்புக்கு அனுப்பியாவது அவனுக்கு கற்றுத் தந்துவிடலாம். தனியார் பள்ளியில் சேர்ப்பது சரியான முடிவு அல்ல என்பதை உணர்ந்து நான் உடனடியாக என் முடிவை மாற்றிக் கொண்டேன். இன்று ( தருமபுரி நகராட்சி நடுநிலைப்பள்ளி - சந்தைப்பேட்டை ) அரசு பள்ளியில் இருவரையும் சேர்த்து விட்டேன் என் மகளையும் மகனையும்.
அரசு விழா ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழாவை நான் அன்று மனதால் உணர முடியவில்லை, காரணம் தனியார் பள்ளி சிறந்தது என்ற மோகத்தில் அடிமைப்பட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் இன்று அந்த அடிமை மனதிலிருந்து விடுபட்டு விட்டேன். அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள் நீங்களும் சுதந்திரமாக மனதை விழிப்புணர்வோடு முடிவு எடுங்கள். நம்ம அரசு பள்ளியே சிறந்தது என்று உணருங்கள். படிக்காத பாமரன் கூட அரசு பள்ளியை நம்பும்போது படித்த நாம் ஏன் நம்பிக்கை வைக்கக்கூடாது, நம் குழந்தைகளை சரியான பாதையில் நம்மைவிட யார் கொண்டு செல்வார்கள். விழித்துக் கொள்ளுங்கள் தோழர்களே நன்றி
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups