''பழம் ஏலம் விடுறதுல, மோசடி நடந்துருக்குங்க...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார், அந்தோணிசாமி.''என்னன்னு விளக்கமா சொல்லுங்க வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.''நீலகிரி மாவட்டம், குன்னுார் பர்லியாரில் விளையுற துரியன், மங்குஸ்தான் பழங்களை விற்பனை செய்யுறதுக்கு, தோட்டக்கலை துறை இணை இயக்குனர் தலைமையில, தனியாருக்கு ஏலம் விட்டாங்க...''அதுல, துரியன் பழம், 6 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனதை, 4.16 லட்சம் ரூபாய்க்கு போனதாகவும், மங்குஸ்தான் பழம், 9.50 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விட்டுட்டு, 6.30 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனதாகவும் கணக்கு காட்டிருக்காங்க...''இப்படி பட்டப்பகல் மோசடி பண்ணுறாங்களேன்னு, சிலர், மாநில தோட்டக்கலை இயக்குனருக்கு புகார் அனுப்பியிருக்காங்க... நடவடிக்கை எடுப்பாங்களான்னு தெரியலைங்க...'' என முடித்தார்,
அந்தோணிசாமி.''நகராட்சி கமிஷனரை, ஆளுங்கட்சிக்காரங்க மிரட்டுறாங்களாம் பா...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார், அன்வர்பாய்.''என்னன்னு விபரமா சொல்லும் ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.''சென்னை, தாம்பரம் நகராட்சியில, ஆளுங்கட்சி முக்கிய புள்ளிகள் ஒண்ணு சேர்ந்து, டெங்கு தடுப்பு பணியாளர்களுக்கான கான்ட்ராக்ட் எடுத்திருந்தாங்க... அவங்க மேல ஏகப்பட்ட முறைகேடு புகார் வந்துருக்கு பா...''அதனால இப்போ, அந்த பணிக்கு மீண்டும் டெண்டர் வந்தப்போ, ஆளுங்கட்சிக்காரங்களுக்கு கொடுக்காம, அதுக்கு முன்னாடி, அந்த பணியை செஞ்ச நிறுவனத்துக்கு, 'கான்ட்ராக்ட்' கொடுத்துருக்காங்க பா...''இதனால, அந்த ஆளுங்கட்சிக்காரங்க ஒண்ணா போய், நகராட்சி பெண் கமிஷனரை பார்த்து, 'எங்ககிட்ட வச்சிக்காதீங்க... இது தான், உங்களுக்கு கடைசி'ன்னு மிரட்டியிருக்காங்க பா...'' என முடித்தார், அன்வர்பாய்.''பள்ளிக் கல்வித் துறையில வாரிசு ஆதிக்கம் அதிகமாயிடுத்துன்னு புலம்பறா ஓய்...'' என கடைசி தகவலுக்கு வந்தார், குப்பண்ணா. ''விளக்கமா சொல்லும் வே...'' என்றார் அண்ணாச்சி.''துறை மேலிடத்தின் வாரிசு, தன் உறவினர் ஒருத்தரை, அப்பாவுக்கு, பி.ஏ.,வா போட்டிருக்கார்...
இவர், ரெண்டு மாசத்துக்கு முன்னாடி, மெட்ரிக் பள்ளி இயக்குனரகத்துல சூப்பரின்டென்டண்டா இருந்தவர் தான் ஓய்...''இப்ப, பரமசிவன் கழுத்து பாம்பாயிட்டாரோன்னோ... இதனால, சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு வழக்கமா குடுக்கற தொடர் அங்கீகாரத்தைக் கூட, 'எங்களை கேட்காம குடுக்கப்டாது'ன்னு, பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளுக்கு கடிவாளம் போடறார் ஓய்... ''இதுக்கு, இதே துறையில சூப்பரின் டென்டண்டா இருக்கற ஒருத்தரும் ஒத்தாசை பண்றார்... ''இவா ரெண்டு பேரும் சேர்ந்துண்டு, வாரிசு சொல்றதை, துறையில அமல்படுத்திண்டு இருக்கா... 'ஒட்டுமொத்த துறையுமே, வாரிசு கட்டுப்பாட்டுல தான் இயங்குது'ன்னு அதிகாரிகள் முணுமுணுத்துண்டு இருக்கா ஓய்...'' என்றார் குப்பண்ணா.அரட்டை முடியவும், நண்பர்கள் கிளம்பினர்.எதிரில் வந்தவரை நிறுத்திய அண்ணாச்சி, ''என்ன கதிர்வேல் நல்லாயிருக்கீயளா... உம்ம பசங்க, செந்திலும், தில்லையும் சொன்னபடி கேக்காவளா வே...'' என வம்பளக்க, மற்றவர்கள் இடத்தை காலி செய்தனர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.