Breaking

Tuesday, July 21, 2020

'ஆன்லைன்' விண்ணப்பம் திணறும் மாணவர்கள்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தில் கல்லுாரிகளில் சேர்வதற்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு முறையை ரத்து செய்து, கல்லுாரிகளில் சிறப்பு மையங்கள் ஏற்படுத்த வேண்டும். கொரோனா பரவலால், கல்லுாரிகளில் பட்டப் படிப்பில், நேரடி விண்ணப்பம் வழங்கலுக்கு அரசு தடை விதித்து, நேற்று முதல், ஆன்லைன் விண்ணப்ப முறையை துவங்கி உள்ளது. இதில் கிராமப்புற மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.அவர்கள், நகர் பகுதிக்கு வந்து, தனியார் ஆன்லைன் மையங்களில், 350 ரூபாய் வரை கட்டணம் செலுத்தி, விண்ணப்பிக்க வேண்டி உள்ளது.மதுரை காமராஜ் பல்கலை, தனியார் கல்லுாரிகள் நிர்வாகிகள் சங்க செயலர் ராஜகோபால் கூறியதாவது:பிளஸ் 2 முடித்து, கல்லுாரிகளில் சேர்வது, பெரும்பாலும் கிராமப்புற மாணவர்கள் தான். அரசு கல்லுாரிகளில் சேர்க்கைக்கு, மாவட்டத்திற்கு ஒரு ஆன்லைன் பதிவு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதுபோல், தனியார் கல்லுாரிகளில் பதிவு மையம் ஏற்படுத்தி, சமூக இடைவெளியுடன் நேரடி அல்லது ஆன்லைன் சேர்க்கை நடத்த, அரசு அனுமதி அளிக்க வேண்டும். இதனால், மாணவர்களின் வீண் செலவு தவிர்க்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog