10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் கலவை அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வினாத்தாள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு பாதுகாப்புக்காக போலீசார் நிற்க வைக்கப்பட்டு வருகின்றனர். ஆற்காடு அடுத்த கலவை தாலுகாவில் இருங்கூர், மாம்பாக்கம், வாழைப்பந்தல், மேச்சேரி அரசுப் பள்ளிகள் மற்றும் கலவை தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத மையம் அமைக்கப்பட்டது. அதன்படி, மையங்களுக்கு தேவையான வினாத்தாள்கள் கடந்த மார்ச் மாதம் கலவை அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வைக்கப்பட்டது.
தொடர்ந்து வினாத்தாள் வைக்கப்பட்ட அறைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மார்ச் மாதம் நடைபெற இருந்த தேர்வு தள்ளி வைக்கப்பட்டது. இதையடுத்து கடந்த ஜூன் மாதம் 15ம் தேதி 10ம் வகுப்பு தேர்வு நடத்த அரசு உத்தரவிட்டது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. ஆனால், வைரஸ் பரவல் அதிகமாக இருந்ததால் தேர்வினை நடத்த மாணவர்களின் பெற்றோர்கள், அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்தது.
இந்த நிலையில், கலவை அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வினாத்தாள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு தற்போதும் போலீசார் இரவு, பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு பாதுகாப்பு பணிகளுக்கு போலீஸ் பற்றாக்குறை உள்ள நிலையில் ரத்து செய்யப்பட்ட தேர்விற்கான வினாத்தாள்களை பாதுகாக்க போலீசார் நிற்க வைக்கப்பட்டு வருவது மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர்களை மற்ற பாதுகாப்பு பணிகளுக்கு பயன்படுத்த ேவண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.