Breaking

Wednesday, June 24, 2020

ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்கள் கண்கள் மட்டுமின்றி மனதளவிலும் பாதிப்பு ஏற்படும் : மருத்துவர்கள் எச்சரிக்கை!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஆன்லைன் வகுப்புகள் மூலம் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் அறிக்கை கேட்டிருக்கும் நிலையில், ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்கள்
கண்கள் மட்டுமின்றி மனதளவிலும் பாதிப்பு ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஸ்கூல் பேக், நோட் புக், யூனிபார்ம் உள்ளிட்டவை தேவையில்லை. வீட்டுப்பாடம் எழுதிய மாணவர்கள் தற்போது வீட்டிலேயே பாடம் கற்பிக்கும் சூழலை கொரோனா ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து டிவி, மொபைல் பார்த்தால் கண்கள் கெட்டுவிடும் என்று கூறும் பெற்றோர்கள் தற்போது அவற்றையே பார்த்து படிக்கச் சொல்லும் அளவுக்கு நிலைமை மாறிவிட்டது. வகுப்புகளுக்கு ஏற்றார் போல் தினமும் 3 மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை ஆன்லைனில் மாணவர்கள் கல்வி கற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திரையில் தெரியும் எழுத்துக்கள் சிறியதாக இருப்பதால் மாணவர்கள் உற்றுப் பார்க்க கூடிய சூழல் ஏற்படுவதாகவும் இதன் மூலம் கண்களுக்கு உலர்க்கண், தூர பார்வை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட வாய்பிருப்பதாகவும் கண் மருத்துவர்கள் கூறுகின்றனர். முறையான இடைவெளி விட்டு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற வேண்டும் என்றும், அப்போது தான் கண் திசுக்களின் பாதிப்பை குறைக்க முடியும் என்றும் மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஒரு அறையில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு கண்கள் மட்டுமின்றி மனதளவிலும் பாதிப்புகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog