சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு உலக யோகா சாம்பியன் போட்டியில் இந்தியா சார்பாக கலந்துகொள்வதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள கோவையைச் சேர்ந்த பள்ளி மாணவரான நிரஞ்சன் அத்லெட்டிக் யோகா குறித்த விழிப்புணர்வை வீட்டிலிருந்தபடியே செய்து வருகிறார்.ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படும் என ஐ.நா சபை அறிவித்து, அதன்படி கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஜூன் மாதம் 21-ம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் கோவை கணபதி காந்தி மாநகரைச் சேர்ந்த நிரஞ்சன் என்ற பள்ளி மாணவர் வீட்டிலிருந்தபடியே யோகா குறித்த பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார்.தனது ஆறாம் வயது முதல் யோகா கற்று கொள்ள ஆரம்பித்த இவர், தாய்லாந்து, மலேசியா போன்ற பல்வேறு நாடுகளில் நடைபெற்ற யோகா போட்டிகளில் கலந்து வெற்றி பெற்ற தங்க பதக்கங்கள் உள்பட பல்வேறு பரிசுகளை வென்றுள்ளார்.இந்நிலையில் இவர் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் அத்லெட்டிக் யோகா முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
விளையாட்டு வீரர்கள் புதிய முறையில் இந்த யோகா பயிற்சியினை மேற்கொள்வதால், முதுகுத்தண்டை வலுப்படுத்தவும், சமநிலைப்படுத்தவும், மேலும், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற மனம் குவிப்பு திறன், செயல்திறன் போன்றவை இந்த யோகாவால் மேம்படுவதாகவும், உடல், மனம் உறுதியடைந்து ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுவதால் விளையாட்டு வீரர்கள் உடற்பயிற்சியோடு இந்த யோகாவையும் செய்வதால் அனைத்துவிதமான போட்டிகளிலும் வெற்றிகளை குவிக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.நடைபெற உள்ள சர்வதேச யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பாக கலந்துகொள்ள இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.