CLICK HERE TO READ OFFICIAL NEWS
பிளஸ் 1ல் விடுபட்ட வேதியியல், கணக்கு பதிவியல் மற்றும் புவியியல் பாட தேர்வுகள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளதால், 'அரியர்' எழுத காத்திருந்த பிளஸ் 2 மாணவர்களின் பட்டியலை கல்வித்துறை தயாரித்து வருகிறது.பிளஸ் 1 பொதுத்தேர்வில், ஒரு மாணவன் குறிப்பிட்ட பாடங்களில் தோல்வி அடைந்தாலும், மேற்கொண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெறலாம்.
CLICK HERE TO READ OFFICIAL NEWS
இருப்பினும், தோல்வியடைந்த பிளஸ் 1 பாடத்தை மீண்டும் தேர்வெழுதி தேர்ச்சி பெற்றால் மட்டுமே பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் வினியோகிக்கப்படும்.இதன் அடிப்படையில், 2019 -20ம் கல்வியாண்டில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களில், சிலர் கடந்த, 2018- 19ம் கல்வி யாண்டில் பிளஸ் 1ல் தோல்வி அடைந்திருப்பர்.இவர்கள் நடப்பாண்டு பிளஸ் 1 தேர்வையும், பிளஸ் 2 தேர்வையும் ஒருசேர எழுத காத்திருந்திருப்பர். கொரோனாவால், பிளஸ் 1 தேர்வு வேதியியல், கணக்குபதிவியல் மற்றும் புவியியல் தேர்வு ரத்தாகிவிட்டது. பிளஸ் 2 வேதியியல், கணக்குபதிவியல் மற்றும் புவியியல் தேர்வு நாள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
CLICK HERE TO READ OFFICIAL NEWS
எனவே, பிளஸ் 2 கடைசி தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கும், பிளஸ் 1 மதிப்பீடு தேவைப்படுகிறது.இதனை கருத்தில் கொண்டு, அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், சுயநிதி பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில், 2018 - 19ம் கல்வியாண்டில், பிளஸ் 1 வேதியியல் கணக்குப்பதிவியல் மற்றும் புவியியல் பாடங்களில் தோல்வி யுற்ற மாணவர்களின் விவரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன. இவர்களின் வருகைப்பதிவேடுகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.