பொறியியல் இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு - அண்ணா பல்கலைக்கழகம் பரிசீலனை
அண்ணா பல்கலைக் கழகத்தில் இறுதியாண்டு பொறியியல் பட்டம் படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தலாம் என்று அண்ணா பல்கலைக் கழகம் ஆலோசித்து வருகிறது. ெகாரோனா வைரஸ் தொற்று மேலும் அதிகரித்து வருவதால், கல்லூரிகளை திறப்பது குறித்து ஏஐசிடிஇ கடந்த வாரம் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, வரும் கல்வியாண்டில் பொறியியல் படிப்புகளில் புதியதாக சேரும் மாணவர்களுக்கான வகுப்புகளை ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் தொடங்கலாம் என்றும், இரண்டு முதல் இறுதியாண்டு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் திறக்கலாம் என்றும் தெரிவித்து இருந்தது. மேலும் செமஸ்டர் தேர்வுகளை பொறுத்தவரையில் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நடத்தலாம் என்றும் தெரிவித்து இருந்தது. இந்நிலையில், ெகாரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் குறைய வில்லை. அதனால்நாடு முழுவதும் பதற்றம் அதிகரித்து வருகிறது. இதனால் பொறியியல் கல்லூரி மணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகளை உடனடியாக நடத்தினால்பிரச்னையாகும் என்று ஏஐசிடிஇ கருதுகிறது.
இதையடுத்து, அ்ண்ணா பல்கலைக் கழகத்தில் இறுதியாண்டு படிக்கும் பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்தலாம் என்று அ்ண்ணா பல்கலைக் கழகம் கருதுகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக மாணவர்கள் அதிக அளவில் ஒரு இடத்தில் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு ஆன்லைன் தேர்வு முறை இந்த ஆண்டு அறிமுகப்படுத்த அண்ணா பல்கலைக் கழகம் ஆலோசித்து வருகிறது. தமிழகத்தில் 500க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக கழகத்தில் இணைப்பு பெற்றுள்ளன. அவற்றில் பிஇ, பிடெக் படிப்புகளில் இறுதி ஆண்டில்மட்டும் 1 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். தற்போதுள்ள சூழ்நிலையில் அவர்கள் இறுதியாண்டில் எழுத வேண்டிய தேர்வுகள் ஒத்திப் போனால், அவர்களின் அடுத்தகட்ட படிப்பு மற்றும் வேலை வாய்ப்புகளில் பிரச்ைன ஏற்படும். அதனால் விரைவாக இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை நடத்தி முடி்த்தால் நல்லது என்று அண்ணா பல்கலைக் கழகம் கருதுகிறது.
தேர்வு மையங்கள் அமைத்து அவற்றில் தேர்வு எழுத வைத்தால் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் அதை தவிர்க்கவே ஆன்லைன் தேர்வு முறையை கொண்டு வர ஆலோசித்து வருகின்றனர். இது குறித்து அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் சுரப்பா தரப்பில் கூறப்படுவதாவது: கூட்டமாக மாணவர்கள் கூடுவதை தவிர்க்க ஆன்லைன் தேர்வு முறை பயன்படும். இதற்காக செயற்கை நுண்ணறிவு (ஏ1) மென்பொருள் உதவியுடன் ஆன்லைன் தேர்வு நடத்த முடியும். இதன் மூலம் சுமார் 70 சதவீத மாணவர்கள் ஆன்லைன் தேர்வு எழுத முடியும். 30 சதவீத மாணவர்கள் தேர்வு மையங்களில் தேர்வு எழுத முடியும். ஆன்லைன் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் தேர்வு மையங்கள் மூலம் தேர்வு எழுத இரண்டாவது வாய்ப்பு கிடைக்கும் என்று அண்ணா பல்கலைக் கழகம் நம்புகிறது. அதனால் ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடந்தாலும், நேரடியாக தேர்வு மையங்களிலும் தேர்வு நடத்தப்படும் சூழல் உள்ளதாக அண்ணா பல்கலைக் கழக வட்டாரங்கள் தெரிவிிக்கின்றன.
பொறியியல் இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் தேர்வினை நடத்த அண்ணா பல்கலைக்கழகம் பரிசீலனை நடத்தி வருகிறது
கொரோனா பாதிப்பு காரணமாக மாணவர்கள் அதிக அளவில் கூடுவதைத் தவிர்க்கும் பொருட்டு ஆன்லைன் முறை தேர்வு இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
ஆன்லைன் முறையிலும் மற்றும் நேரடியாகவும் தேர்வெழுதும் வகையில் தேர்வு நடத்தப்பட உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளது இதில் இறுதியாண்டில் சுமார் 1 லட்சம் மாணவர்கள் பயின்று வருகின்றனர். தற்போது கொரோனோ பாதிப்பு காரணமாக கல்லூரிகள்.மூடப்பட்டுள்ளன
இருப்பினும் இறுதியாண்டு மாணவர்களுக்கு விரைவாக தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டிய கட்டாயத்தில் அண்ணா பல்கலைக்கழகம் உள்ளது.
அதே நேரத்தில் தேர்வினை நடத்தும் போது மாணவர்கள் அதிகளவில் திரளக்கூடிய சூழல் உள்ளது இதனை தவிர்க்கும் வகையில் அண்ணா பல்கைக்கழகம் தேர்வு நடத்த புதிய வழிமுறையினை ஆலோசித்து வருகிறது.
அதன்படி இறுதியாண்டு மாணவர்களுக்கு நடத்தவேண்டிய இறுதி செமஸ்டர் தேர்வினை ஆன்லைன் முறையில் நடத்த பரீசிலித்து வருகிறது.
மேலும் ஆன்லைன் முறையில் தேர்வுகள் நடத்தப்பட்டாலும் நேரடியாகவும் தேர்வுகள் நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.