ஆன்லைனில் வகுப்புகள் எடுக்க பள்ளிகளுக்கு தடையில்லை என அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றால் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளும் சுமார் 2மாதங்கள் விடுமுறையில் உள்ளன. பத்தாம் வகுப்பு தேர்வு, கல்லூரி தேர்வுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் சில பள்ளிகள் மாணவர்களுக்கு ஆன்லைன்மூலம் வகுப்புகள் எடுத்து வருகின்றன. இந்நிலையில் தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்பு எடுக்கக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஆன்லைனில் வகுப்புகள் எடுக்கும் பள்ளிகள் மீதும், பொதுமுடக்க காலத்தில் கல்வி கட்டணத்தை வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், ஆன்லைனில் வகுப்புகள் எடுக்க பள்ளிகளுக்கு தடையில்லை என அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். அதாவது, ஆசிரியர்களை பள்ளிகளுக்கு வரவழைத்து, ஆன்லைன் வகுப்புகள் எடுக்கத்தான் தடை என விளக்கம் கொடுத்துள்ளார்.
எனினும் அமைச்சரின் இப்படி மாறுபட்ட கருத்தால் ஆசிரியர்கள், மாணவர்கள் குழப்பம் அடைந்து வருவதாக கல்வியாளர்கள் கூறுகின்றனர்.
ஆன்லைனில் வகுப்பு எடுப்பதை தடுக்க முடியாது என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். ஆன்லைன் வகுப்பிற்கு தடை என அறிவித்த சிறிது நேரத்தில் அமைச்சர் திடீரென அறிவித்துள்ளார்.
கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் 3வது வாரத்தில் இருந்து பள்ளிகள் தமிழகத்தில் மூடப்பட்டுள்ளன. பள்ளி இறுதி தேர்வு நடைபெறாத நிலையில் 1முதல் 9ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது.
இந்நிலையில் இந்த கல்வியாண்டில் வரும் ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படாது என்பது உறுதியாகி உள்ளது. பள்ளிகள் திறப்பு ஆகஸ்ட் மாதம் தான் இருக்கும் என்பது அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் சொல்கின்றன. ஜூலையில் பள்ளிகள் திறக்கப்படுமா என்பதை தமிழக அரசு அறிவித்தால் தான் உறுதியாக தெரியவரும்.
இந்த சூழலில் : ஆன்லைனில் வகுப்புகள் எடுக்கும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரித்தார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, "முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் செயல்படும் முதல்வர் தலைமையிலானஅரசு பல்வேறு பணிகளை செயல்பட்டு வருகிறது. எல்லா பணிகளிலும் முன்னோடியாக தமிழகம் திகழ்கிறத. பள்ளிகல்வித்துறை சார்பாக புதிதாக வகுப்பறையை நோக்கி என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
முன்னதாக சென்னை, திருவள்ளூரில் செயல்படுத்தப்பட்டது. இப்போது தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்படுகிறது. பாடநூலை பொறுத்தவரையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் ஆன்லைனில் வகுப்புகள் எடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிகல்வித்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. ஊரடங்கில் கல்வி கட்டணத்தை வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இப்படி அறிவித்த சிறிது நேரத்திலேயே தனது நிலைப்பாட்டை அமைச்சர் மாற்றிக் கொண்டுள்ளார். ஆன்லைனில் வகுப்பு எடுப்பதை தடுக்க முடியாது என்றும் மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வந்து பாடம் நடத்தக்கூடாது என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து வகுப்பு எடுக்க தான் தடைவிதிக்கப்பட்டுள்ளது - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்
ஆன்லைனில் வகுப்பு எடுப்பதை தடுக்க முடியாது - அமைச்சர் செங்கோட்டையன்
ஆன்லைன் வகுப்பிற்கு தடை என அறிவித்த சிறிது நேரத்தில் அமைச்சர் அடுத்த அறிவிப்பு
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.