பஸ்களை பழுது நீக்கப் பயன்படுத்தப்படும் வாகனத்தில், பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிக்கு, ஆசிரியர்களை அழைத்துச் சென்ற விவகாரம், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் உள்ள விடைத்தாள் திருத்தும் மையங்களில், வால்பாறையைச் சேர்ந்த, 15 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். முதல் நாளான நேற்று, மூன்று ஆசிரியர்கள் மட்டும் விடைத்தாள் திருத்தும் பணிக்கு செல்வதற்காக, சிறப்பு பஸ் ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆனால், ஒரு ஆசிரியர் வந்ததும், சிறப்பு பஸ், பொள்ளாச்சி புறப்பட்டது. அதன்பின், இரு ஆசிரியர்களை, பழுது நீக்கும் வாகனத்தில் அழைத்து சென்றனர். பின், அட்டகட்டியில் நிறுத்தி வைக்கப்பட்ட, சிறப்பு பஸ்சில் ஏறி, மூன்று ஆசிரியர்களும், பொள்ளாச்சியிலுள்ள விடைத்தாள் மையத்துக்கு சென்றனர்.
பழுது நீக்கும் வாகனத்தில், ஆசிரியர்கள் பயணித்த, 'வீடியோ' சமூக வலைதளங்களில் பரவியது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா கூறியதாவது:வால்பாறை மலைப் பகுதி என்பதால், அங்குள்ள ஆசிரியர்கள், விடைத்தாள் திருத்தும் பணிக்கு, 10:00 மணிக்குள் வந்தால் போதும் என தெரிவித்திருந்தோம்.ஆனால், வால்பாறையில் இருந்து, காலை, 7:00 மணிக்கு புறப்பட வேண்டிய பஸ், காலை, 6:00 மணிக்கே புறப்பட்டது.
இதனால், வேறு வழியின்றி, பழுது நீக்கும் வாகனத்தில், ஆசிரியர்கள் அட்டகட்டி வரை சென்று, அதன்பின் சிறப்பு பஸ்சில், பொள்ளாச்சியை அடைந்தனர். அரசு பஸ் முன்னதாக இயக்கப்பட்டதால், இந்த பிரச்னை ஏற்பட்டது.இவ்வாறு, அவர் கூறினார்.
அரசு போக்குவரத்துக் கழக, கிளை மேலாளர் ராஜசேகர் கூறியதாவது:சிறப்பு பஸ், காலை, 6:20 மணிக்கு இயக்கப்பட்டது. நிர்ணயித்த நேரத்தில், ஒரு ஆசிரியர் மட்டுமே வந்திருந்தார். மற்ற இரு ஆசிரியர்கள் தாமதமாக வந்ததால், இந்த வாகனத்தில் அழைத்து சென்று, சிறப்பு பஸ்சில் சேர்த்தோம். ஆசிரியர்கள் தாமதமாக வந்ததற்கு, நாங்கள் என்ன செய்ய முடியும்?இவ்வாறு, அவர் கூறினார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.