'தினமலர்' மற்றும் 'அமிர்தா விஸ்வ வித்யாபீடம்' இணைந்து, மாணவர்களின் சிறந்த எதிர்காலத்திற்கு அடித்தளமிடும், 'வழிகாட்டி' நிகழ்ச்சி முற்றுலும் ஆன்லைனில் நடக்கிறது.
ஊரடங்கு நீடிக்கும், இன்றைய கால கட்டத்தில், உயர்கல்வி நிறுவனங்களில் இந்த ஆண்டு அட்மிஷன் நடைபெறுவது எப்போது? நுழைவுத் தேர்வுகள் எப்போது? வீட்டில் இருந்தே திறன்களை வளர்த்துக் கொள்வது எப்படி?வரும் காலத்தில், வேலை வாய்ப்பை அள்ளித்தரும் துறைகள் எவை? இன்ஜினியரிங் துறையில் வாய்ப்புகள் எப்படி? தேசிய கல்லுாரிகளில் இலவசமாக படிப்பது எப்படி? என்பது உட்பட மாணவர்களது அனைத்து விதமான உயர்கல்வி சந்தேகங்களுக்கும் தீர்வு காணும் வகையில், பல்வேறு அம்சங்களுடன், 'வழிகாட்டி' நிகழ்ச்சி, உங்கள் இல்லம் தேடி வருகிறது.
சிவில் சர்வீசஸ், கலை, அறிவியல், சட்டம், மருத்துவம், துணை மருத்துவம், டிசைன், ஆர்க்கிடெக்சர், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ், மிஷின் லேர்னிங், டீப் லேர்னிங், சைபர் செக்யூரிட்டி உட்பட, 30க்கும் மேற்பட்ட துறைகள் குறித்து, துறை சார்ந்த நிபுணர்கள், ஆன்லைன் வாயிலாக ஆலோசனை வழங்க உள்ளனர். 'நீட்' மற்றும் 'ஜே.இ.இ.,' போன்ற தேசிய நுழைவுத்தேர்வுகளில் சாதிப்பதற்கான வழிமுறைகள், கிளாட், நாட்டா, கேட் போன்ற நுழைவுத் தேர்வுகளின் முக்கியத்துவம், அனைத்து பிரிவு மாணவர்களுக்கான உதவித்தொகை வாய்ப்புகள், ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., - ஐ.ஐ.எஸ்சி., - ஐ.சி.டி., நிப்பர், எய்ம்ஸ், ஜிப்மர், ஐ.எஸ்.ஐ., - ஐ.ஐ.எஸ்.இ.ஆர்., போன்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களில், சேர்க்கை பெறுவதற்கான வழிமுறைகள் ஆகியவை குறித்தும், விளக்கம் அளிக்கப்படுகிறது.
'இஸ்ரோ' முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை, ஐ.ஏ.எஸ்., அதிகாரி உதயச் சந்திரன், தன்னம்பிக்கை பேச்சாளர் கோபிநாத், கல்வி ஆலோசகர்கள் நெடுஞ்செழியன் மற்றும் ஜெயப்பிரகாஷ் காந்தி உட்பட பலர், மாணவர்களது சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க உள்ளனர்.மாணவர்களின் வசதிக்கு ஏற்ப, ஸ்மார்ட் போன், டேப்லட், லேப்டாப் ஆகியவற்றின் வாயிலாக, இருந்த இடத்தில் இருந்தபடியே, ஆன்லைன் வழியாக இந்நிகழ்ச்சியை எளிதாக காணலாம்... சந்தேகங்களை கேட்கலாம்... கலந்துரையாடலாம்...!இந்நிகழ்ச்சியில், எச்.சி.எல்., டெக்னாலஜிஸ், ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் ஆகியவை, 'பவர்டு பை ஸ்பான்சர்'களாக பங்கேற்கின்றனர்.


மேலும், வேல்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ், டெக்னாலஜி அண்டு அட்வான்ஸ்டு ஸ்டடீஸ், ஸ்ரீ சாய்ராம் கல்வி நிறுவனங்கள், இ-பாக்ஸ் காலேஜஸ் மற்றும் ஸ்ரீ ஈஸ்வர் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் ஆகியவை, 'அசோசியேட் ஸ்பான்சர்'களாக இணைந்து உள்ளனர்.உடனே பதிவு செய்யுங்கள்!மே, 6ம் தேதி முதல், 10 நாட்களுக்கு, தினமும் காலை, 10 முதல், 12:00 மணி வரை இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது. வேறுபட்ட தலைப்புகளில், 30க்கும் மேற்பட்ட வல்லுநர்கள், ஆன்லைனில் ஆலோசனைகளை வழங்கும் இந்நிகழ்ச்சியில் பங்கு பெற,
www.kalvimalar.com இணையதளத்தில் உடனே பதிவு செய்யுங்கள்.
அனைத்தும் இலவசம்பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு மிகவும் பயனுள்ள இந்நிகழ்ச்சியில் பங்கேற்க, எந்த கட்டணமும் இல்லை. மேலும், பதிவு செய்யும் அனைத்து மாணவர்களுக்கும், ஆன்லைன் வாயிலாக நடைபெறும் சைக்கோமெட்ரிக் தேர்வு, நீட் மற்றும் ஜே.இ.இ., மாதிரி தேர்வு அனைத்தும் இலவசம்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.