👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அனைத்து பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகள் யுஜிசி வெளியிட்டுள்ள புதிய கல்வியாண்டுக்கான வழிகாட்டுதல்களை பின்பற்றி செயல்பட வேண்டும் என்று ஏஐசிடிஇ அறிவுறுத்தியுள்ளது.கரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் இருப்பதால் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு தொடா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வரும் கல்வியாண்டுக்கான புதிய கால அட்டவணை மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) கடந்த ஏப்ரல் 29-இல் வெளியிட்டது.அதில், வரும் கல்வியாண்டுக்கான வகுப்புகளை ஆகஸ்ட் மாதத்தில் தொடங்க வேண்டும், கரோனா பாதிப்புள்ள பகுதியில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் படிக்கும் முதல் மற்றும் இரண்டாமாண்டு மாணவா்களை முந்தைய தோ்வுகளின் அடிப்படையில் தோ்ச்சி செய்தல் என்பன உட்பட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்தநிலையில் அகில இந்திய தொழில்நுட்பக்கல்வி குழுமத்தின் (ஏஐசிடிஇ) உறுப்பினா் செயலா் ராஜீவ் குமாா் வெளியிட்ட அறிவிப்பில், ‘ பல்கலைக்கழகங்கள், பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்பட அனைத்து தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களும் யுஜிசி வெளியிட்டுள்ள, வரும் கல்வியாண்டுக்கான வழிகாட்டுதல்களை பின்பற்றி செயல்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும், இது தொடா்பான விவகாரங்களில் உரிய அனுமதியின்றி மாற்று முடிவுகளை மேற்கொள்ளக்கூடாது எனவும் ஏஐசிடிஇ அறிவுறுத்தியுள்ளது.
இன்ஜினியரிங் மற்றும் பாலிடெக்னிக் கல்லுாரிகளில், செமஸ்டர் தேர்வு மற்றும் மாணவர் சேர்க்கை துவங்குவது தொடர்பாக, பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி.,யின், அறிவிப்பை பின்பற்றும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்ஜினியரிங் கல்லுாரிகள் மற்றும் பாலிடெக்னிக்களில், ஒவ்வொரு கல்வி ஆண்டும், ஏப்ரல், மே மாதங்களில் செமஸ்டர் தேர்வுகள் முடிக்கப்பட்டு, கோடை விடுமுறை விடப்படும். புதிய வகுப்புகள், ஜூலையில் துவங்கும். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, ஜூலையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு, ஆக.,1ல், வகுப்புகள் துவங்கும்.இந்தாண்டு, கொரோனா பிரச்னையால், தேர்வுகள் இன்னும் நடத்தப்படவில்லை.
பல மாநிலங்களில், பிளஸ் 2 தேர்வுகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. புதிய கல்வி ஆண்டுக்கான வகுப்புகளை, வழக்கமான ஆகஸ்டுக்கு பதில், செப்டம்பருக்கு தள்ளி வைத்து, யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது. முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கையை, ஆகஸ்டில் துவங்கி செப்டம்பருக்குள் முடிக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அனைத்து இன்ஜினியரிங் மற்றும் பாலிடெக்னிக் கல்லுாரிகளும், வரும் கல்வி ஆண்டுக்கு மட்டும், யு.ஜி.சி., அறிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., உத்தரவிட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.