Breaking

Friday, May 01, 2020

வீடியோ கான்பரன்சிங்கிற்காக ஜியோவின் பிரத்யேக செயலி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
வீடியோ கான்பரன்சிங் மேற்கொள்ள பல செயலிகள் உலாவி வரும் நிலையில், ஜியோவும் அதற்கென பிரத்யேக செயலியை வெளியிட முடிவு செய்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், ஐடி பணியாளர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிகின்றனர். பணியில் இருப்போரிடம் ஒன்றாக உரையாட மற்றும் தகவலை பரிமாற உதவ வீடியோ கான்பரன்சிங் தளங்கள் பல உள்ளன. அவற்றில் ஜூம், கூகுள் ஹேங்அவுட், ஸ்கைப் ஆகியவை முதன்மையானதாக உள்ளன. பல அரசியல் கட்சியினரும் தங்கள் கட்சியினரிடம் ஜூம் தளம் மூலமாக ஆலோசனை கூட்டம் நடத்தி வருகின்றனர். இவ்வளவு ஏன், ஊரடங்கால் வீட்டில் முடங்கியுள்ளதால், பல திருமணங்கள் கூட வீடியோ கான்பரன்சிங் வழியாக தான் நடத்தப்படுகிறது.
இதனால், இந்த தளங்களின் பயன்பாடு அதிகரித்து வருகின்றன. தற்போது இந்த களத்தில் இறங்க ‛ஜியோ'வும் தயாராகியுள்ளது. வீடியோ கான்பரன்சிங் சேவைக்காக ‛ஜியோ மீட்' என்னும் பிரத்யேக செயலியை வெளியிட முடிவு செய்துள்ளது. இது கூகுள் பிளே ஸ்டோர், ஆப்பிள் ஸ்டோர், விண்டோஸ் மார்க்கெட்டில் மட்டுமல்லாமல், பிரவுசர்களிலும் இந்த சேவையை பயன்படுத்த முடியும். மற்ற வீடியோ கான்பரன்சிங் தளங்களை விட, ஜியோ மீட் பிரத்யேக அம்சங்களைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog