சென்னை மாநகரில் குறுகலான தெருக்கள் , மக்கள் நெருக்கம் அதிகம் மிகுந்த பகுதியே காரணம். அறிகுறி உள்ளவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கே சென்று கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. சென்னையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 3 வேளையும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. மற்ற மாநிலங்களை விட கொரோனா பாதிப்பு தமிழகத்தில் குறைவாக உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். தமிழகம் முழுவதும் 50 மையங்கள் மூலம் தினமும் 12 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் உள்ள வெளி மாநில தொழிலாளர்கள் 1 வாரத்தில் தங்கள் சொந்த ஊருக்கு அனுப்பப்படுவார்கள். ஜீன் மாதமும் இலவசமாக ரேசன் பொருட்கள் வழங்கப்படும்.
4000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை தயார் : முதல்வர்
கொரோனா தடுப்பு குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்களுக்காக உரையாற்றினார். அப்போது கொரோனாவை தடுக்க மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாக தெரிவித்தார். நோய் பரவலை தடுக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அதிகாரிகளுடன் அவ்வப்போது ஆலோசனை நடத்தி வருவதாக அவர் கூறியுள்ளார். தடை செய்யப்பட்ட பகுதிகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அந்தப்பகுதிகளில் தினம் மூன்று முறை கிருமி நாசினி தெளிக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். நில வேம்பு கசாயமும், கபசுர குடிநீரும் நோயாளிகளுக்கு அளிக்கப்படுகிறது என்ற கூறிய முதல்வர், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறியுள்ளார். சரியான முறையில் சிகிச்சை அளிக்கப்படுவதால் குணமடைந்து வருவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக அவர் கூறினார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து முதலமைச்சர் தொலைக்காட்சி மூலமாக மக்களுக்கு உரையாற்றி வருகிறார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு , மக்கள் தங்கள் ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும். தமிழகம் முழுவதும் நோய் தடுப்பு பணிக்காக ஐ.ஏ.எஸ் குழுக்கள் அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர்களுடன் இதுவரை 4 முறை ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
"மக்கள் அதிகம் வசிப்பதே சென்னையில் கொரோனா பரவ காரணம்" : முதல்வர்
கொரோனா தடுப்பு குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்களுக்காக உரையாற்றி வருகிறார். அப்போது கொரோனாவை தடுக்க மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாக தெரிவித்தார். நோய் பரவலை தடுக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அதிகாரிகளுடன் அவ்வப்போது ஆலோசனை நடத்தி வருவதாக அவர் கூறியுள்ளார்
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.