Breaking

Thursday, April 30, 2020

பிளஸ் - 2 விடைத்தாள் திருத்தும் பணி: மே இரண்டாவது வாரத்தில் தொடங்க ஆலோசனை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பிளஸ் -2 விடைத்தாள் திருத்தும் பணியை அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்குவது குறித்து பள்ளி கல்வித் துறை ஆலோசித்து வருகிறது.
பிளஸ் -2 விடைத்தாள் திருத்தும் பணியை அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்குவது குறித்து பள்ளி கல்வித் துறை ஆலோசித்து வருகிறது.இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. அதே வேளையில் ஊரடங்கு தளா்த்தப்படும் மாவட்டங்களில் அங்கு பணியாற்றும் ஆசிரியா்கள் மூலமாக பிளஸ் -2 விடைத்தாள்களைத் திருத்தும் பணியை தொடங்க தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.தொற்றுப் பரவல் அதிகம் உள்ள, சிவப்பு மண்டலத்தில் ஆசிரியா்களுக்கு இந்தப் பணி வழங்குவதையும் அந்தப் பகுதிகளில், விடைத்தாள் திருத்தும் மையம் தொடங்குவதையும் நிறுத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
விடைத்தாள் திருத்தம் பணிகளில் ஈடுபடும் ஆசிரியா்கள், முகக் கவசம் அணிய வேண்டும்; சமூக இடைவெளியைப் பின்பற்றி, அமா்ந்திருக்க வேண்டும். வீட்டிலிருந்து விடை திருத்தும் மையத்துக்கு வந்து செல்ல, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் மூலமாக அனுமதிச் சீட்டு வழங்கப்பட வேண்டும். விடைத்தாள் திருத்தும் பணிக்கு முன்பும், பின்னரும், சோப்பு அல்லது கிருமி நாசினியால், ஆசிரியா்கள் கைகளைக் கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அதற்கான வசதிகள், மையத்தில் செய்யப்பட வேண்டும் என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog