👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அகவிலைப்படி நிறுத்தம், ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு மறுப்பு போன்ற, சம்பள வெட்டு நடவடிக்கைகளை, தமிழக அரசு உடனே திரும்ப பெற வேண்டும்' என, அனைத்து துறை சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து, ஒருங்கிணைப்பாளர்கள் தமிழ்ச்செல்வி, ஜனார்த்தனன் வெளியிட்ட அறிக்கை: நிதி ஆதாரங்களை பெருக்க, பல்வேறு வழிகள் இருக்கின்றன. அதைத் தவிர்த்து, அரசு ஊழியர்களை வஞ்சிக்கும் வகையில், ஒன்றரை ஆண்டுகளுக்கு அகவிலைப்படி மறுப்பு, ஓராண்டிற்கு ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு பறிப்பு, பொதுவைப்பு நிதி வட்டி விகிதம் குறைப்பு என, பல்வேறு வகைகளில், சம்பள வெட்டு செய்யப்பட்டு உள்ளது.
பெருநிறுவனங்களின், சமூக பொறுப்புணர்வு நிதிகள் அனைத்தையும், அரசிடம் ஒப்படைக்க உத்தரவிட்டால், 5 லட்சம் கோடி ரூபாய் நிதி கிடைக்கும். மேலும், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களின் வாகன செலவுகள், இலவச சலுகைகள் அனைத்தும் குறைக்கப்பட வேண்டும். பெரும் பணக்காரர்களின் சொத்து வரியை, 2 சதவீதமாக அதிகரிக்க வேண்டும்.
இதை விட்டுவிட்டு, அரசு ஊழியர்களின் சம்பள வெட்டை, ஏற்க முடியாதது. இது, அனைத்து தரப்பு தொழிலாளர்களையும் பாதிக்கும். எனவே, அகவிலைப்படி நிறுத்தி வைப்பு, ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு மறுப்பு, பொது வைப்பு நிதி வட்டி விகிதம் குறைப்பு போன்ற, சம்பள வெட்டு நடவடிக்கைகளை, தமிழக அரசு, உடனே திரும்பப் பெற வேண்டும்.இல்லையெனில், மே முதல் வாரத்தில், கருப்பு பட்டை அணிந்து, பணி செய்வது என, முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.