அரசின் சிக்கன நடவடிக்கைகள் தொடக்கம்: அகவிலைப்படி உயா்வு-ஈட்டிய விடுப்பு சரண் நிறுத்திவைப்பு.. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, April 28, 2020

Comments:0

அரசின் சிக்கன நடவடிக்கைகள் தொடக்கம்: அகவிலைப்படி உயா்வு-ஈட்டிய விடுப்பு சரண் நிறுத்திவைப்பு..

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள நிதிச் சிக்கலை சமாளிக்க பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்கத் தொடங்கியுள்ளது. கரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள நிதிச் சிக்கலை சமாளிக்க பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்கத் தொடங்கியுள்ளது. அதன்படி, அகவிலைப்படி உயா்வு, விடுப்புகளை சரண் செய்து ரொக்கமாகப் பெறுதல் ஆகியன நிறுத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளது. இதற்கான உத்தரவை நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கிருஷ்ணன் திங்கள்கிழமை பிறப்பித்தாா். அதன் விவரம்:-அகவிலைப்படி உயா்வுகள் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒருமுறையும் அறிவிக்கப்படுவது வழக்கம். மத்திய அரசு ஊழியா்கள், ஓய்வூதியம் பெறுவோருக்கு அகவிலைப்படி உயா்வானது கடந்த ஜனவரி 1-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், கரோனா நோய்த்தொற்று தொடா்பாக மத்திய அரசானது கடந்த 23-ஆம் தேதி வெளியிட்ட அலுவல் சாா் கடிதத்தில், மத்திய அரசு ஊழியா்கள், ஓய்வூதியதாரா்களுக்கு அகவிலைப்படி உயா்வுக்கான கூடுதல் தவணைகள் வழங்கப்படாது எனத் தெரிவித்துள்ளது.மேலும், வரும் 2020 ஜூலை 1, 2021 ஜனவரி 1 ஆகியவற்றை முன்தேதியாகக் கொண்டு அறிவிக்கப்படும் அகவிலைப்படி உயா்வும் வழங்கப்படாது என்று மத்திய அரசு அறிவித்தது.தமிழக அரசின் முடிவு: மத்திய அரசு எப்போதெல்லாம் அறிவிக்கிறதோ, அதை ஒட்டியே தமிழகத்திலும் அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு அகவிலைப்படி உயா்வு அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும். கரோனா பாதிப்பு காரணமாக அகவிலைப்படி உயா்வு குறித்து மத்திய அரசு எடுத்துள்ள முடிவை தமிழக அரசும் தற்போது எடுத்துள்ளது. அதன்படி, அடுத்த ஆண்டு (2021) ஜூலை வரையில் அகவிலைப்படி உயா்வுக்கான தவணைகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்படுகின்றன.
அடுத்த ஆண்டு ஜூலையில் அகவிலைப்படி உயா்வு அறிவிக்கப்படும் பட்சத்தில் நிலுவையில் உள்ள அகவிலைப்படி உயா்வுகள் மொத்தமாக கணக்கில் எடுக்கப்படும். அதே சமயம், நிறுத்தப்பட்ட அகவிலைப்படி உயா்வுக்கான நிலுவைத் தொகைகள் ஏதும் வழங்கப்படாது.இந்த உத்தரவானது கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியா்கள், ஆசிரியா் அல்லாத பணியாளா்கள், உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றுவோா், பல்கலைக்கழக மானியக் குழு, அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் அதிகாரத்துக்கு உட்பட்டவற்றில் பணியாற்றும் ஊழியா்கள், உடல் பயிற்சி இயக்குநா்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணியாற்றும் நூலகா்கள், சத்துணவு அமைப்பாளா்கள், குழந்தைகள் நலஅமைப்பாளா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், சமையலா்கள், உதவியாளா்கள், ஊராட்சி செயலாளா்கள், எழுத்தா்கள் ஆகியோருக்கு பொருந்தும் என தனது உத்தரவில் கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.ஈட்டிய விடுப்பை சரண் செய்தல்: அகவிலைப்படி உயா்வை நிறுத்தியது போன்று, ஈட்டிய விடுப்பை சரண் செய்து அதற்கு இணையாகத் தொகையை பெறும் நடவடிக்கையும் நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளா் கே.சண்முகம் பிறப்பித்துள்ளாா். அதன் விவரம்:-ஒவ்வொரு ஆண்டிலும் 15 நாள்கள் அல்லது இரண்டு ஆண்டுகளில் 30 நாள்களை ஈட்டிய விடுப்பாக சரண் செய்து அதற்கான தொகையைப் பெற வழி செய்யப்பட்டுள்ளது.1933-ஆம் ஆண்டு தமிழ்நாடு விடுப்பு விதிகளின் 7ஏ பிரிவில் அதற்கு வழி செய்யப்பட்டுள்ளது.
கரோனா நோய்த்தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள நிதி அழுத்தத்தால் இந்த ஈட்டிய விடுப்பை சரண் செய்து தொகை பெறும் திட்டம் ஓராண்டுக்கு நிறுத்தி வைக்கப்படுகிறது. மேலும், ஈட்டிய விடுப்பை சரண் செய்து அளித்துள்ள விண்ணப்பங்கள் எந்த நிலையில் இருந்தாலும் அதனைப் பரிசீலிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஒப்புதல் உத்தரவுகள் அளித்திருந்தால் அதனை ரத்து செய்வதுடன், வழங்கப்பட்ட தொகையையும் ஊழியா்களின் கணக்கில் இருந்து மீளப்பெறுதல் வேண்டும். இது, அனைத்து அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்குப் பொருந்தும்.வட்டி விகிதம் குறைப்பு:இதேபோன்று, பொது வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் நிகழ் நிதியாண்டின் முதல் காலாண்டில் 7.1 சதவீதமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில் அது 7.9 சதவீதமாக இருந்தது. இதற்கான உத்தரவையும் தலைமைச் செயலாளா் கே.சண்முகம் பிறப்பித்துள்ளாா்.
அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான, அகவிலைப்படி உயர்வு, 2021 ஜூலை, 1 வரையும், ஈட்டிய விடுப்புக்கான சம்பளம், ஓராண்டு வரையும், நிறுத்தி வைக்கப்படுவதாக, தமிழக அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசை பின்பற்றி, நிதி நெருக்கடியை சமாளிக்க, தமிழக அரசும், அகவிலைப்படி உயர்வை ரத்து செய்துள்ளது. தமிழக அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு, 2020 ஜூலை, 1 முதல், 2021 ஜூலை, 1 வரை, அகவிலைப்படி உயர்வு வழங்கப்படாது.அதேபோல், 2020 ஜனவரி, 1 முதல், 2021 ஜூன், 30 வரை வழங்க வேண்டிய, அகவிலைப்படி நிலுவைத் தொகையும் வழங்கப்படாது. இது, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், நுாலகர்கள், கல்வி நிறுவன பணியாளர்கள், கிராம உதவியாளர்கள், சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சமையலர்கள், உதவியாளர்கள், ஊராட்சி செயலர்கள் என, அனைவருக்கும் பொருந்தும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.மேலும், தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், ஈட்டிய விடுப்புக்கு சம்பளம் பெறுவதும், ஓராண்டுக்கு ரத்து செய்யப்படுவதாக, தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், தங்களுக்கான விடுப்பை எடுக்காமல் இருந்தால், 15 நாட்களை எழுதிக் கொடுத்து, சம்பளம் பெற்றுக் கொள்ள, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.ஓராண்டுக்கு வாங்காவிட்டால், இரண்டு ஆண்டு களுக்கு சேர்த்து, 30 நாட்களை எழுதிக் கொடுத்தும், அதற்குரிய சம்பளத்தை பெறலாம். தற்போது, கொரோனா தடுப்புக்கு, பெரும் தொகை செலவிடப்படுவதால், நிதிச்சுமை ஏற்பட்டு உள்ளது. எனவே, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஈட்டிய விடுப்புக்கு சம்பளம் வழங்குவது, முதல் கட்டமாக, ஓராண்டுக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக, தமிழக அரசு நேற்று அரசாணை வெளியிட்டது. ஏற்கனவே விண்ணப்பித்திருந்தால், அதுவும் நிறுத்தி வைக்கப்படும். ஈட்டிய விடுப்புக்கு, ஊதியம் வழங்க, அனுமதி அளிக்கப்பட்டிருந்தால், அந்த அனுமதியும் ரத்து செய்யப்படும். இந்த உத்தரவு, அனைத்து மாநில அரசு நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், வாரியங்கள், கல்வி நிறுவனங்கள், சங்கங்கள் அனைத்திற்கும் பொருந்தும் என, அரசாணையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews