Search This Blog
Tuesday, April 07, 2020
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஜே.இ.இ., தேர்வுக்கான விண்ணப்பத்தை திருத்த, கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.தேசிய உயர்கல்வி நிறுவனங்களான, ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., உள்ளிட்டவற்றில், இன்ஜினியரிங் படிப்பில் சேர, தேசிய அளவில், ஜே.இ.இ., நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.மே இறுதியில் நடத்தப்பட உள்ள இந்த தேர்வுக்கு, ஏற்கனவே விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இந்த விண்ணப்பங்களில் தவறுகள் ஏதாவதுஇருந்தால், அவற்றை திருத்தம் செய்ய, அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் விண்ணப்பித்த மாணவர்கள், ஜே.இ.இ., மெயின் தேர்வுக்கான இணையதளத்தில், வரும், 14ம் தேதி வரை பிழைகளை திருத்தலாம் என, தேர்வுக்குழு அறிவித்துள்ளது
NEET JEE 2020: கொரோனா வைரஸ் காரணமாக நீட், ஜேஇஇ மெயின் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தை மாணவர்களுக்கு உதவும் வகையில் விண்ணப்பப்படிவம் சரிபார்ப்பதற்கும், திருத்தங்கள் மேற்கொள்வதற்கும் Application Form Correction வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இது பற்றிய விவரங்களை இங்கு பார்க்கலாம்.
நீட் தேர்வு, ஜேஇஇ மெயின் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், தாங்கள் பூர்த்தி செய்த விண்ணப்பத்தில் பிழைகள் இருந்தால், அதனை திருத்திக் கொள்ள வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்தாண்டிற்கான நீட், ஜேஇஇ, யுஜிசி உள்ளிட்ட முக்கிய தேர்வுகள் அனைத்தும் கொரோனா வைரஸ் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தேசிய தேர்வு முகமையின் அறிவுறத்தல்படி, மே மாத தொடக்கத்தில் நடைபெறவிருந்த நீட், ஜேஇஇ தேர்வுகள், மே கடைசி வாரத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
பொதுவாக பெரும்பாலான தேர்வுகளில் மாணவர்கள் விண்ணப்பிக்கும் போதுd தெரியாமல் சில பிழைகள் செய்துவிடுவார்கள். எனவே, ஒவ்வொரு தேர்வின் விண்ணப்பப்பதிவு முடிவடைந்த பிறகு, விண்ணப்பப்பத்தில் திருத்தம் செய்வதற்கு கால அவகாசம் வழங்கப்படும். அந்த வகையில் நீட், ஜேஇஇ மெயின் தேர்வுக்கும் ஏற்கனவே விண்ணப்ப திருத்தம் செய்வதற்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டு, நிறைவு பெற்றது.
தற்போது கொரோனா வைரஸ் காரணமாக நீட், ஜேஇஇ தேர்வுகள் தள்ளி போயுள்ளதால், மாணவர்களுக்கு தங்களுடைய விண்ணப்பப்படிவத்தில் திருத்தம் செய்வதற்கு இரண்டாவதாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, விண்ணப்பப்படிவத்தில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு ஏப்ரல் 14 ஆம் தேதி வரையில் கால அவகாசம் வழங்கப்படுகிறது.
எனவே, மாணவர்கள் இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி, தங்களுடைய அப்ளிகேஷனில் எல்லா தகவல்களும் சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். குறிப்பாக நீட் தேர்வில் கடந்தாண்டு நடந்த முறைகேட்டின் காரணமாக, இந்தாண்டு அதிகமான கெடுபிடி இருக்கும். எனவே, ஒரு முறைக்கு இரண்டு முறை, எல்லா தகவல்களும் உண்மையனதாக, சரியாக குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
JEE - தேர்வுக்கான விண்ணப்பத்தை திருத்த, கூடுதல் அவகாசம்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.