Breaking

Tuesday, April 07, 2020

NEET - பாட திட்டம் மாற்றமா?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
'நீட் பாட திட்டத்தை, இந்திய மருத்துவ கவுன்சில் முடிவு செய்யும்' என, தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., போன்ற மருத்துவ படிப்புகளிலும், இந்திய மருத்துவ முறையான, ஆயுஷ் மருத்துவ படிப்புகளிலும் சேர, நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். நடப்பு கல்வி ஆண்டுக்கான, நீட் நுழைவு தேர்வு, மே, 3ல் நடைபெறும் என, அறிவிக்கப்பட்டிருந்தது.ஆனால், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையால், ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மே, 3ம் தேதி தேர்வு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.அதனால், மே மாத இறதியில், தேர்வு நடைபெறலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில், நீட் தேர்வுக்கான பாட திட்டம் மாற்றப்பட உள்ளதாக, தகவல்கள் வெளியாயின. இதுதொடர்பாக, நீட் தேர்வை நடத்தும், தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'நீட் தேர்வு குறித்த பாட திட்டத்தை, தேசியதேர்வு முகமை மேற்கொள்ளாது.
இந்திய மருத்துவ கவுன்சிலான, எம்.சி.ஐ., மட்டுமே முடிவு செய்யும். தற்போதைய நிலையில், ஏற்கனவே அறிவித்த பாட திட்டத்திலேயே தேர்வு நடத்தப்படும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட் பாடத்திட்டத்தில் மாற்றமா என்பது குறித்து தேசியத் தேர்வுகள் முகமை பதில் அளித்துள்ளது. பொது மருத்துவம், பல் மருத்துவம், சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வே நீட் தேர்வு என அழைக்கப்படுகிறது.
இத்தேர்வு வரும் மே 3-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. கரோனா அச்சம் காரணமாக தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நீட் தேர்வின் பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியானது. இதுகுறித்து தேசியத் தேர்வுகள் முகமை (என்டிஏ) பதில் அளித்துள்ளது. இது தொடர்பாக நீட் யுஜி வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''நீட் 2020 தேர்வுக்காகத் தயாராகும் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் நீட் பாடத்திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
என்டிஏ எப்போதும் பாடத் திட்டத்தை முடிவு செய்வதில்லை. பாடத் திட்டம் குறித்த இணைப்பை மட்டுமே வழங்குகிறது. இந்திய மருத்துவக் கவுன்சில் மட்டுமே பாடத் திட்டத்தை முடிவு செய்கிறது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை நடத்தி, தேர்வு முடிவுகளை வெளியிடுவது மட்டுமே தேசியத் தேர்வுகள் முகமையின் பணியாகும். மே கடைசி வாரத்தில் நீட் தேர்வு நடைபெறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog