👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கரோனா வைரசை விரைவாகக் கண்டறிய உதவும் இயந்திரத்தை தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரிக்கு இந்திய உணவு பதன தொழில்நுட்ப நிறுவனம் (ஐ.ஐ.எப்.பி.டி.) புதன்கிழமை வழங்கியது.
மத்திய அரசின் உணவு பதப்படுத்துதல் தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் ஆய்வு மற்றும் கல்வி நிறுவனமே இந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழகம். இந்நிறுவனத்தில் நவீன உணவு தரப் பரிசோதனை மற்றும் பல்வேறு வகையான உணவிலுள்ள நுண்ணுயிர் கிருமிகளைக் கண்டறியும் தொழில்நுட்ப வசதியும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிறுவனம் தானியங்கி ஆர்.என்.ஏ.வை பிரித்து எடுக்கும் இயந்திரத்தை வழங்குவதற்கான ஆவணத்தை தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் குமுதா லிங்கராஜிடம் இந்திய உணவு பதன தொழில்நுட்ப நிறுவன இயக்குநர் சி. அனந்தராமகிருஷ்ணன் புதன்கிழமை வழங்கினார்.
இதுகுறித்து அனந்தராமகிருஷ்ணன் தெரிவித்தது:
இந்த தானியங்கி ஆர்.என்.ஏ. பிரித்து எடுக்கும் இயந்திரம் இரண்டு மணிநேரத்தில் 100 பேரின் சோதனை மாதிரிகளில் கரோனா வைரஸ் தாக்கத்தைக் கண்டறிய உதவும். மேலும், கரோனா தொற்றை விரைவாகக் கண்டறிந்து, நோயாளிகளுக்கு உரியச் சிகிச்சை அளிக்க இந்தச் சாதனம் உதவும். இதுமட்டுமல்லாமல், ஆய்வில் ஈடுபடுவோரின் பாதுகாப்பையும் உறுதி செய்கிறது என்றார் அனந்தராமகிருஷ்ணன்.
இந்த இயந்திரத்தைப் பெற்றுக் கொண்ட தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் குமுதா லிங்கராஜ் கூறுகையில்,
கரோனா வைரஸ் தாக்குதலை விரைவாகக் கண்டறிதலில் இந்திய உணவு பதன தொழில் நிறுவனத்தின் பங்களிப்பு பாராட்டுக்குரியது என்றார் அவர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.