“WhereIsOurLaptop” என்று கேட்கும் மாணவர்கள் ; முறையான பதில் வருமா ஸ்டாலின் அவர்களே? – எடப்பாடி பழனிசாமி…!
லேப்டாட் குறித்து அரசுப்பள்ளி மாணவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு முறையான பதில் அளிக்க முடியுமா..? என்று தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அதிமுக பொதுசெயளலார் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுக பொதுசெயளலார் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
”அரசுப்பள்ளிகள், அரசுக் கல்லூரிகளைச் சார்ந்த மாணவர்களின் Career Guide-ஆக, Life Shaping Device-ஆக, கல்விக்கான ஆயுதமாக இருந்த மடிக்கணினியை, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் வழியில் எனது தலைமையிலான அதிமுக அரசு தொடர்ந்து வழங்கி வந்தது. இந்த மடிக்கணினிகளால் பயனடைந்த இளைஞர்களை இன்றைய தினம் சந்தித்து, அவர்கள் வாழ்வில் ஏற்படுத்திய பெரும் மாற்றத்தினைக் கேட்டு அகமகிழ்ந்தேன். அதே சமயம், தற்போதைய அரசுப்பள்ளி மாணவர்களும், இன்றைய திமுக ஆட்சியில் லேப்டாப் கிடைக்காமல், விஞ்ஞானக் கல்வி கிடைப்பது தடைபட்டு, தாங்கள் வஞ்சிக்கப்படுவதை, தங்கள் உள்ளக் குமுறலை வெளிப்படுத்தினார்கள். ஸ்டாலின் மாடல் அரசு, நான்கரை ஆண்டுகளாக லேப்டாப் வழங்காமல், தற்போது தேர்தல் வரப்போகிறது எனத் தெரிந்ததும், ஒரு நாடகத்தை அரங்கேற்றத் தயாராகி விட்டது. அரைகுறை ஆயிரம் ரூபாய் போலவே, இதுவும், சம்மந்தமே இல்லாமல், கல்வி ஆண்டின் நடுவில், கடைசி ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் வழங்குவதன் காரணம் என்ன? ஏன் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கவில்லை ? இன்றைய AI காலத்தில் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு தகவமைத்துக் கொள்ளும் அளவிற்கு இவர்கள் தரும் லேப்டாப் இருக்கிறதா? என்றால் அதுவும் இல்லை.
Election Eyewash-க்காக லேப்டாப் கொடுப்பது போல Drama நடத்தும் உங்களுக்கும், Education Elevation-க்காக தொடர்ந்து லேப்டாப் கொடுத்த எங்களுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களே..! WhereIsOurLaptop என்று நான் கேட்கவில்லை; உங்களால் நான்கரை ஆண்டுகாலமாக வஞ்சிக்கப்பட்ட அரசுப்பள்ளி மாணவர்கள் கேட்கிறார்கள். உரிய, முறையான பதில் வருமா ஸ்டாலின் அவர்களே?” கேள்வி எழுப்பியுள்ளார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.