படிக்கும் போது தூக்கம் வந்தால் என்ன செய்ய வேண்டும்? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, April 03, 2020

Comments:0

படிக்கும் போது தூக்கம் வந்தால் என்ன செய்ய வேண்டும்?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நான் டிகிரி முடித்து விட்டு டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கு படித்து வருகிறேன். இதற்காக தினமும் 2 மணி நேரம் கோச்சிங் கிளாஸ் சென்று வருகிறேன். பயிற்சி வகுப்பிலும் சரி, வீட்டில் படிக்கும் போதும் சரி.. எனக்கு தூக்கம் வந்து விடுகிறது. படிக்கும் முதல் அரை மணி நேரம் ஒன்றும் தெரியவில்லை. ஆனால், அதன் பிறகு என்னையே அறியாமல் தூங்கி தூங்கி விழுகிறேன். இதற்கு என்ன செய்யலாம். படிக்கும் போது வரும் தூக்கத்தை கட்டுப்படுத்துவது எப்படி? -வசந்தன், சென்னை
​படிக்கும் போது தூக்கம் வருகிறது
படிக்கும் போது தூக்கம் வருகிறது. இது உங்களுக்கு மட்டும் இருக்கும் பிரச்னை அல்ல. நூற்றில் 90 சதவீதம் பேருக்கு இந்த சங்கடம் உண்டு. இதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. படிப்பில் ஆர்வமில்லாமை, வேண்டா வெறுப்பாக படித்தல், தூக்கமில்லாமை, உடற்சோர்வு இவ்வாறு சொல்லிக் கொண்டே போகலாம். எனவே, இதில் எந்த காரணத்தினால் படிக்கும் போது தூக்கம் வருகிறது என்பது உங்களுக்கு மட்டுமே தெரியும். இருப்பினும், அவ்வாறு தூக்கம் வந்தால், பொதுவாக என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி சுருக்கமாக இங்கு பார்க்கலாம்.
நல்ல வெளிச்சம் இருக்க வேண்டும்.
படிக்கும் போது நல்ல வெளிச்சம் இருக்க வேண்டும். நீங்கள் படிக்கின்ற அறையில் நல்ல வெளிச்சமும், காற்றோட்டமும் இருக்க வேண்டும். சில பேர் டேபிள் லைட் (Table Lamp) வைத்து படிப்பார்கள். அப்படி இல்லாமல், நீங்கள் படிக்கும் அறை முழுவதும் வெளிச்சம் இருக்க வேண்டும். அதற்கென ஆயிரம் வாட்ஸ் பல்பு வாங்கி போட்டு விடக்கூடாது. ஒரளவு வெளிச்சமாக இருக்கும் வகையில், சாதாரண டியூப் லைட், மெர்குரி லேம்ப் வாங்கி போடலாம்.
​மெத்தையில், தரையில் அமர்ந்து படிக்காதீர்
பள்ளி, கல்லூரி மாணவர்களும் சரி, போட்டித்தேர்வுக்கு தயாராவோரும் சரி, வீட்டில் படிக்கும் போது நல்ல செளகரியமாக அமர்ந்து படிக்கிறார்கள். அவ்வாறு இருக்கக்கூடாது. சேரில் அமர்ந்து படிக்க வேண்டும். மெத்தையில் படுத்துக் கொண்டோ, தரையில் படுத்துக் கொண்டோ புத்தகங்களை வாசித்தால், தூக்கம் வந்து விடும். எனவே, நீங்கள் எப்படி அமர்ந்து படிக்கிறீர்கள் என்பதையும் பார்க்க வேண்டும். தரையில் இருந்து படிக்க நினைத்தால், சம்மணம் போட்டு அமர்ந்து படியுங்கள். இது உடலுக்கும் நல்லது, அவ்வளவு சீக்கரம் தூக்கமும் வராது.
​மூச்சு முட்ட சாப்பாடு?
எப்போதும் நல்ல முழு சாப்பாடு சாப்பிட்டால் தூக்கமும் சோம்பலும் வந்து விடும். எனவே, முடிந்த வரையில் குறைவாக சாப்பிடுங்கள். குறிப்பாக தேர்வு சமையங்களில் டயட் மெயின்டேன் பண்ணுங்கள். எப்போதும் அரை வயிறு சாப்பாடு, கால் வயிறு நீர் ஆகாரம், மீதம் கால் வயிறு வெற்றிடமாக இருக்கும் வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். முழு சாப்பாடு சாப்பிட்டால், ஒரு அரை மணி நேரம் ஓய்வு எடுத்தப் பிறகு படியுங்கள்.
​தண்ணீர்
அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். உடல் உழைப்பை விட, மனதால் சிந்திப்பதே நம்மை அதிக சோர்வை உண்டாக்கும். உடலால் உழைப்பவர்கள் 7 மணி நேரம் தூங்கினால், மூளையை பயன்படுத்தி வேலை செய்பவர்கள் 8 மணி நேரம் தூங்க வேண்டும். .அந்த அளவுக்கு நமது உடற்சக்தி சிந்தனை வழியாக வீணாகிறது. இவ்வாறு ஏற்படும் மனசோர்வை ஈடு செய்ய அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். அப்போது தான் புத்துணர்ச்சியுடன் படிக்க முடியும்.
நீண்ட நேரம் ஒரே இடத்தில் ஒரடியாக இருக்கக் கூடாது.
நீண்ட நேரம் ஒரே இடத்தில் ஒரடியாக இருக்கக் கூடாது. ஒரே இடத்தில் நீண்ட நேரம் படிக்கும் போது தூக்கமும், உடல் சோர்வும் வரும். எனவே, அவ்வபோது கை, கால்களை அசைத்துக் கொள்ளுங்கள். வீட்டில் ஓரிரு நிமிடங்கள் நடந்து வாருங்கள். இவ்வாறு ஒரு 20 நிமிடங்களுக்கு ஒரு முறை உடலுக்கு மாற்று ஆசனம் கொடுத்தால், இரத்த ஓட்டம் சீராகும். தொடர்ந்து படிப்பதற்கு புத்துணர்ச்சி கிடைக்கும்
​நல்ல உறக்கம்
நீங்கள் படிக்கும் நேரமும் மிக முக்கியமானதாகும். இரவில் சீக்கிரம் தூங்கி விட்டு, அதிகாலையில் படிப்பதே சாலச்சிறந்தது. இரவில் சீக்கரமாக படுத்து விட்டீர்கள். நல்ல தூக்கம். பின்பு காலையில் எழுகிறீர்கள். இவ்வாறு நல்ல தூங்கிய பிறகு படிக்கத் தொடங்கினால், மீண்டும் தூக்கம் வராது. எனவே, நல்ல உறக்கம் தேவை. நீண்ட உறக்கம் தேவை. இரவில் தூக்கம் வரவில்லை என்றால், தரையில் அமர்ந்து புத்தகம் வாசியுங்கள். உடனே தூங்கிவிடலாம். இவ்வாறு உங்கள் பலவீனத்தையே பலமாக்குங்கள்.
கடினமான பாடங்களை..
கடினமான பாடங்களை இரவு நேரத்தில் படிக்க வேண்டாம்: கணிதம், அறிவியல் போன்றவை கடினமாக இருந்தால், அதனை இரவு நேரத்தில் படிக்க வேண்டாம். கணக்கு, சூத்திரம் போன்றவை தீர்க்கும் போது அதிக நேரம் பிடிக்கும். எனவே, இது போன்ற கடினமான பாடங்களை அதிகாலையில் படிப்பது பொதுவாக நன்றாக இருக்கும். மற்றபடி, சிலருக்கு இரவு நேரங்களில் கணக்கு போடுவதில் ஆர்வம் இருக்கும். அப்படியான நிலையில், அவர்கள் இரவிலும் படிக்கலாம்.
​சத்தம் போட்டு படிக்கலாமா?
சிறிது நேரம் மனதிற்குள் படித்தால், சில நிமிடங்கள் சத்தம் போட்டு படிக்கலாம். அல்லது நண்பர்கள் யாரிடமாவது நீங்கள் படித்ததை சொல்லி பார்க்கலாம். ஆனால், உங்களுடைய அதீத ஆர்வம், மற்றவர்களுக்கு இடையூறாக இருக்கக்கூடாது. சத்தம் போட்டு படிக்கிறேன் என்ற பெயரில் வீட்டில் உள்ளவர்களை எல்லோரையும் தொந்தரவு செய்யக் கூடாது. தொடர்ந்து மனதிற்குள்ளே படித்து வந்தால், சிலருக்கு அலுப்பு ஏற்பட்டு விடும். அதற்காகவே இந்த பயிற்சி. இதே போல், அரை மணி நேரம் படித்துக் கொண்டே இருந்தால், ஒரு 5 நிமிடம் நீங்கள் படித்ததை எழுதி பார்க்கலாம்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews