Search This Blog
Friday, April 03, 2020
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பழந்தமிழர் மருத்துவத்தில் கொரோனாவுக்கு மருந்து இருக்கிறது என சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல் அப்பட்டமான பொய் என்பது தெரிய வந்துள்ளது.
சமூக வலைதளங்களில் 1914-ம் ஆண்டு வெளியான கைமுறை பாக்கெட் வயித்தியம் என்ற நூலில் கொரோனாவுக்கு மருந்து இருக்கிறது என தகவல் பரப்பப்பட்டு வருகிறது. 1914-ம் ஆண்டு பூ.சு. துளசிங்க முதலியாரால் ஏட்டுப் பிரதியும் கை முறையும் அச்சுப் பிரதியுங்கொண்டு ஆய்ந்து யெழுதி முடிவு பெற்று என்ற முகப்புரையுடன் இந்த நூலின் முதல் பக்கம் ஸ்கேன் செய்யப்பட்டுள்ளது.
அதில்தான் 1914-ம் ஆண்டு இந்த நூல் அச்சிடப்பட்டதாக இடம்பெற்றுள்ளது. மேலும் இதில் பக்கம் 61-ல் கோரோன மாத்திரை என்ற தலைப்பில் பழந்தமிழர் மருத்துவ முறை ஒன்றும் இடம்பெற்றுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதாவது மிளகு உள்ளிட்டவற்றை பயன்படுத்தி எப்படி இந்த மாத்திர தயாரிப்பது என்பதற்கான செய்முறை விளக்கம் இதில் இடம்பெற்றிருக்கிறது.
ஆனால் உண்மை என்ன தெரியுமா? இந்த நூலின் பக்கம் 61-ல் இடம்பெற்றிருந்தது கோரோசன மாத்திரை என்ற தலைப்புதான். இதில்தான் சில சமூக விரோதிகள் ச என்ற எழுத்தை போட்டோஷாப் மூலம் நீக்கிவிட்டு கோரோன மாத்திரை என பொய்யாக ஒரு படத்தை உருவாக்கி அதை சமூக வலைதளங்களில் உலவ விட்டுள்ளனர்.
தற்போது ஒரிஜனல் 61-ம் பக்கமும் எடிட் செய்யப்பட்ட 61-ம் பக்கமும் இணைக்கப்பட்டு உண்மை எது? என்பதை விளக்கும் செய்திகளும் அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
தமிழில் 1914 ஆம் வெளியிடப்பட்ட கைமுறை வைத்திய நூலொன்றில் கரோனாவுக்கு மருந்து தெரிவிக்கப்பட்டிருப்பதாக சமூக ஊடகங்களில் சில பக்கங்கள் வலம் வருகின்றன.
பாக்கெட் அளவுள்ள இந்த நூலின் 61 ஆம் பக்கத்தில் கோரோன மாத்திரை என்ற பெயரில் இந்த மருந்து பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
ஆனால், போட்டோஷாப்பில் கோரோசன என்ற சொல்லை கோரோன என்று எடிட் செய்யப்பட்டிருக்கிறது.
இந்த மருந்துக்காகச் சேர்க்கப்படும் மருந்துப் பொருள்கள் யாவும் விராகநிடை என்ற அளவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மிளகு விராகநிடை ஒன்றரை, லவுங்கம் விராகநிடை ஒன்றரை, ஜாதிக்காய் விராகநிடை ஒன்றரை, ஓமம் விராகநிடை ஒன்று, ஜாபத்திரி விராகநிடை ஒன்று, சித்திரமூலம் விராகநிடை ஒன்று, திப்பிலி விராகநிடை ஒன்றரை, கருஞ்சீரகம் விராகநிடை ஒன்று, கோஷ்டம் விராகநிடை ஒன்று, கோரோஜனை விராகநிடை இரண்டு, நாவல் துளிர் விராகநிடை ஒன்று, மாந்துளிர் விராகநிடை ஒன்று, வேப்பங்கொழுந்து விராகநிடை ஒன்று, பூரம் விராகநிடை ஒன்று.
இவைகளை உலர்த்தி யிடித்து சூரணித்து வஸ்திரகாயஞ்செய்து மேற்படி இருவகைகொ....
நூலின் முதல் - தலைப்புப் பக்கத்தில் கைமுறை பாக்கெட் வயித்தியம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இவை பூ.சு. துளசிங்கமுதலியாரால் ஏட்டுப் பிரதியும் கைமுறையும் அச்சுப் பிரதியுங்கொண்டு ஆய்ந்து யெழுதி முடிவு பெற்று,
பூவிருந்தவல்லி பூ.சு.துளசிங்கமுதலியாரது சுந்...ாச அச்சுக்கூடத்திற் ....ப்பிக்கப்பட்டது. 1914 - எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நூலின் பிரதி யாரிடம் இருக்கிறதெனத் தெரியவில்லை. எனினும், குறிப்பிட்ட இரு பக்கங்கள் வாட்ஸ்ஆப்பில் பகிரப்படுகின்றன.
உள்ளபடியே நூல் இருப்பதும் நூலில் இருக்கும் தகவல்களும் சரியே. ஆனால், கோரோசன, கோரோன ஆக்கப்பட்டதும் அதைக் கொண்டுவந்து கொரோனாவுடன் சேர்த்ததும்தான் கோளாறு!
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
Home
CORONA
INFORMATION
NEWS
பழந்தமிழர் மருத்துவத்தில் கொரோனாவுக்கு மருந்து இருக்கிறது என பரவி வரும் தகவல் உண்மையா?
பழந்தமிழர் மருத்துவத்தில் கொரோனாவுக்கு மருந்து இருக்கிறது என பரவி வரும் தகவல் உண்மையா?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.