அரசு/தனியார் ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மாத சம்பளம்: ஸ்டாலின் அறிக்கை! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, March 24, 2020

Comments:0

அரசு/தனியார் ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மாத சம்பளம்: ஸ்டாலின் அறிக்கை!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
'அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் அனைவரும், பாதிக்கப்படாத வகையில், அவர்களுக்கு, மாத சம்பளம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் கூறியுள்ளார். அவரது அறிக்கை:
உலகத்தை அச்சுறுத்தி வரும், கொரோனா வைரசால், தமிழக அரசின் புள்ளிவிவரப்படி, 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற, தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில், 8,௦௦௦த்துக்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்படுகின்றனர். சென்னை உள்ளிட்ட, மூன்று மாவட்டங்களில், அத்தியாவசிய தேவைகள் மட்டும் அனுமதிக்கப்பட வேண்டும் என, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது, மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
நிதியுதவி கொரோனா நோய் பரிசோதனை கட்டணமாக, 4,500 ரூபாய் என்பது அதிகமாக இருப்பதால், அதை அரசே ஏற்க வேண்டும். மாவட்டம் தோறும், 'வென்டிலேட்டர்' வசதியுடன் உள்ள படுக்கைகளை, அரசு மருத்துவமனைகளில் அதிகரிக்க வேண்டும். தனிமைப்படுத்தும் மையங்களையும், புதிதாக அமைப்பதுடன், தனியார் மருத்துவமனைகளுக்கு தேவைப்பட்டால், போதிய நிதியுதவி செய்து, ஐ.சி.யு., வசதிகளை அதிகரிக்க வேண்டும்.தேவைப்பட்டால், மாவட்டங்களில் உள்ள, பெரிய தனியார் கட்டடங்களையோ அல்லது கல்லுாரிகளையோ, அரசு முன்கூட்டிய கேட்டு பெற்று, தயார் நிலையில் வைக்கலாம்.
தனிமைப்படுத்துதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் அனைவரும், பாதிக்கப்படாத வகையில், அவர்களுக்கு மாத சம்பளத்தை வழங்குவதை, உறுதி செய்ய வேண்டும்.அமைப்புசாரா தொழிலாளர்கள் அனைவருக்கும், ஒரு மாத வாழ்வாதாரத்திற்கு தேவையான நிதியுதவி, ரேஷன் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்வது தான், தனிமைப்படுத்துதல் முயற்சிக்கு வலுசேர்க்கும்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews