👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்கள், தங்களது பிரதான படிப்புகளுடன், துறை சார்ந்த குறுகிய கால படிப்புகளையும் தெரிந்து கொள்ள வேண்டும். குறுகிய கால படிப்புகள் என்பது, வேலைவாய்ப்பை தரும், 'பிரிட்ஜ் கோர்ஸ்' ஆக பார்க்கப்படுகிறது.
கம்ப்யூட்டர் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு, துறை சார்ந்த வேலைகளை அள்ளித் தரும் படிப்பாக, 'பிக் டேட்டா அனலிடிக்ஸ்' உள்ளது. பல தனியார் பயிற்சி நிறுவனங்கள், இந்த படிப்பை பகுதிநேர படிப்பாக நடத்துகின்றன. மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துக்கான தேசிய கல்வி நிறுவனமான, என்.ஐ.இ.எல்.டி., நிறுவனம் சிறந்த நிபுணர்களை கொண்டு, இந்த படிப்பை நடத்துகிறது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இயங்கும் இந்த நிறுவனம், சென்னை கோட்டூர்புரத்தில் செயல்படுகிறது. பி.இ., - பி.டெக்., - எம்.இ., - எம்.டெக்., - எம்.எஸ்., மற்றும் டிப்ளமா எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் முடித்த மாணவர்கள், பிக் டேட்டா அனலிடிக்ஸ் படிப்பில் சேரலாம். தினமும் எட்டு மணி நேரம் என, 12 வாரங்கள் படிப்பு காலம். மொத்த கட்டணமாக, தோராயமாக, 50 ஆயிரம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்படுகிறது. பட்டியலின மாணவர்களுக்கு கட்டணம் கிடையாது. கூடுதல் தகவல்களை,
www.nielit.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.