Search This Blog
Friday, February 28, 2020
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
1928-ம் ஆண்டு சி.வி.ராமன் கண்டுபிடித்த ராமன் விளைவு எத்தனை மிக முக்கியமானது தெரியுமா? இவ்வுலகம் நாளுக்கு நாள் பல கண்டுபிடிப்புகளினாலும் அறிவியல் முன்னேற்றங்களினாலும் வளர்ந்து வருகிறது. அதைச் சிறக்க வைக்கும் முறையில் ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் `தேசிய அறிவியல் தினம்' முக்கியமான நாளாகக் கருதப்பட்டு அனைத்து வருடமும் ஒரு கருத்தை முன்னிறுத்திக் கொண்டாடப்படுகிறது. இந்த வருடத்துக்கான கரு, `அறிவியலுக்காக மக்கள்; மக்களுக்காக அறிவியல்'.
இந்நாள் கொண்டாடக் காரணமாக இருந்தவர் சி.வி.ராமன்.1928-ம் ஆண்டு ராமனால் கண்டுபிடிக்கப்பட்ட ராமன் விளைவு உலகளாவிய கவனத்தை ஈர்த்தது. 1921-ம் ஆண்டு இந்தியாவிலிருந்து லண்டனுக்குச் சென்ற சி.வி.ராமன் நாடு திரும்புகையில் மேற்கொண்ட பதினைந்து நாள் பயணமானது அறிவியல் திருப்பு முனையாக அமையுமென யாரும் எதிர்பார்க்கவில்லை. மத்தியதரைக் கடல் வழியாக மேற்கொண்ட இப்பயணத்தின்போது ஆழ்ந்த சிந்தனையில் இருந்த ராமன் Rayleigh கூற்றின்படி கடலின் நீல நிறத்துக்கான காரணம் வெறும் வானத்தின் பிரதிபலிப்பாக மட்டும் இருக்க முடியாது என்பதை உறுதியாக நம்பினார்.
தண்ணீரிலுள்ள மூலக்கூறுகளால் சூரிய ஒளிச்சிதறல்ஏற்பட்டு கடல் நீல நிறமாகத் தோற்றமளிக்கிறது என்பதைக் கண்டுபிடித்தார். இதைத்தொடர்ந்து கொல்கத்தாவிலுள்ள அவரின் ஆய்வுக்குழு, பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு திரவநிலை மட்டுமல்லாதுதிடப்பொருள்களினாலும் ஏற்படும் ஒளிச்சிதறல் குறித்த அளவீடுகளைக் கண்டறிந்தனர். அவர் கண்டுபிடித்த ராமன் விளைவு 1930-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றுத்தந்தது. இந்தியாவில் படித்து இந்தியாவில் ஆராய்ந்து நோபல் பரிசு பெற்ற முதல் இந்திய அறிவியல் ஹீரோ ராமன்தான்.ராமனின் இந்தக் கண்டுபிடிப்பு மற்ற உலகப் புகழ்பெற்ற ஆராய்ச்சியாளர்களால் அங்கீகரிக்கப்பட்டது.
தனது ஒளிவிளைவு கோட்பாட்டை உறுதி செய்வதற்காக ராமன் லேசர் ஒளியைப் பயன்படுத்தியதன் மூலம் பின்னாளில் நாம் பயன்படுத்தும் கணினியுடன் கூடிய ஸ்பெக்ட்ரோமீட்டர் கண்டுபிடிக்கப்பட்டு இயற்பியல், வேதியியல், நுண்ணுயிரியியல், உயிர்வேதியியல், மருந்து உற்பத்தி தொழில்நுட்பம்முதலான அறிவியல்சார் ஆராய்ச்சிகளுக்குப் பயன்பட்டு வருகிறது. ஒரு அறிவியலாளரின் பயணமும் சிந்தனையும் பெரும் புரட்சி செய்ததனால்தான் இன்று நாம் தேசிய அறிவியல் தினத்தை கொண்டாடுகிறோம்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
இன்று பிப்ரவரி 28 `தேசிய அறிவியல் தினமாக' ஏன் கொண்டாடப்படுகிறது?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.