கல்வித்துறைக்கு முதல் மரியாதை - சிறப்பு கவனம் தரும் பட்ஜெட்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, February 15, 2020

Comments:0

கல்வித்துறைக்கு முதல் மரியாதை - சிறப்பு கவனம் தரும் பட்ஜெட்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஆகச் சிறந்த வல்லமை பொருந்திய தலைமையை இழந்த பின், தனது இருப்பை, நிர்வாகத்தை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டிய மிகப் பெரிய சவால் கடந்த மூன்று ஆண்டுகளாகத் தமிழக அரசை துரத்திக் கொண்டே இருந்தது. சிறிது சிறிதாக ஆட்சியை வலுப் படுத்திக் கொண்டே வந்து, தற்போது 2020-21-ம் ஆண்டுக்கான 'பட்ஜெட்' மூலம் அரசு தன்னை முழுமையாக அடையாளப்படுத்திக் கொண் டுள்ளது. இந்த பட்ஜெட்டில் புதி தாக எந்த இலவசத் திட் டமும் இல்லை; பெரிதாக சலு கைகள் ஏதும் வாரி வழங் கப் படவில்லை; '2021' -ஐ மனதில் வைத்து கவர்ச்சி கரமான அறிவிப்புகள் இல்லை; எல்லாவற்றுக் கும் மேலாக, பொதுமக்கள் மீது புதிதாக 'சுமைகள்' இல்லை.
மற்றுமொரு ஆரோக்கியமான மாற்றமும் தெரிகிறது. வெறுமனே வரவு - செலவுப் பட்டியலாக இல் லாமல், எதிரே உள்ள சவால்கள், கடந்தகால செயல்பாடுகள், மத்திய அரசுக்குக்கான கோரிக்கைகள், நீண்டகாலத் திட்டங்கள் என்று சற்றே ஆழமான பார்வையும் கலந்து இருப்பது உண்மையில் மகிழ்ச்சி யாக இருக்கிறது. கீழடியில் தொடங்குகிறது அறிக்கை. காட்சியகத்துக்கு ரூ.12.21 கோடி; தொல்லியல் துறைக்கு ரூ.31.93 கோடி ஒதுக்கீடு, சரியானதாக, ஓரளவுக்குப் போதுமானதாகவே படுகிறது. மரபுத் தொழில்களில் முதல் மூன்று இடங்களில் இருப்பன - வேளாண்மை, நெசவு, மீன் பிடித்தல். நீண்ட காலத்துக்குப் பிறகு, ஒரு சேர இந்த மூன்று துறைகளுக்கும் சிறப்பு கவனம், கணிசமான நிதி ஒதுக்கீடு கிடைத்திருக்கிறது. இதேபோன்று, குறு, சிறு தொழில்களும் பட்ஜெட்டில் ஓரளவுக்கு நியாயமாக கவனத்தில் கொள்ளப்பட்டு இருக்கிறது. விவசாயி கள், நெசவாளர்கள், மீனவர்கள் மற்றும் கிராமப்புற குடிசைத் தொழில் செய்வோர் நீண்டகால நிரந்தர நன்மைகள் பெறுவார்கள் என்கிற நம்பிக்கையை, நிதிநிலை அறிக்கை ஏற்படுத்துகிறது. . தன்னளவில் இதுவே மிகவும் ஆரோக்கியமான அணுகுமுறை. மேற்சொன்ன துறைகள் 'நல்ல நிலையில்' இருந்தால், ஒட்டு மொத்த பொருளாதாரமும் செழிப்பாக இருக்கும். இதனை உணர்ந்து செயல்பட்டு இருப்பதாகவே தோன்று கிறது. பாராட்டுகள்.
பழங்குடியினர் வாழும் பகுதி களில் அடிப்படை கட்டுமான வசதி கள் மேம்பாட்டுக்கு சிறப்பு கவனம்; வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ள குடும்பங்களுக்கு விபத்துக் காப்பீட்டுக்காக ரூ.250 கோடி; அம்மா உணவகத்துக்கு ரூ.100 கோடி; சுற்றுலாத் துறைக்கு முக்கியத்துவம் தருகிற வகையில், மகாபலிபுரம் மேம்பாட்டுக்கு ரூ. 563 கோடி; ராமேஸ்வரம் நகருக்கு ரூ.9.80 கோடி ஆகிய அறிவிப்புகள் மூலம் மாநில அரசு, சரியான திசையில் பயணிப்பதாகக் கொள்ளலாம். இவற்றுக்கும் எல்லாம் அப் பால், இரண்டு துறைகள் இந்த நிதிநிலை அறிக்கை வெகு சிறப்பாக தயாரிக்கப்பட்டு இருக்கிறது. ஒன்று - கல்வித் துறை. பொதுவாகவே இந்த அரசு, கல்வித் துறையில் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. அதற்கு ஏற்றாற் போல, மிக அதிகமாக, கல்விப் பணிகளுக்கு ரூ.34,181.73 கோடி; பள்ளிச் சிறுவர்களுக்கான இலவசங்களுக்கு ரூ. 1000 கோடி; ப்ளஸ் 1 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்குவதற்காக ரூ.966.46 கோடி என்று உண்மை யிலேயே பிரமாதப்படுத்தி இருக்கி றார்கள். வாழ்க. சிறப்பு கவனத்தை ஈர்த்திருக்கும் மற்றொரு துறை - மகளிர் பாது காப்பு. ரூ.75.20 கோடி செலவில், அரசுப் பேருந்துகளில், சி.சி.டி.வி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட இருக்கின்றன. இன்றைய சூழலில் இது மிகவும் அவசியமான ஒன்று. இத்தனை நாட் களாக ஏன் செய்யவில்லை என்று சிந்திக்க வைக்கிறது இந்த அறிவிப்பு. இது, அரசுக்கு பெரிய ஆதரவைப் பெற்றுத் தரும் என்று தோன்றுகிறது.
மத்திய அரசிடம் இருந்து வரவேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகை, மாநில அரசுகளின் நலன்களுக்கு எதிரான நிதிக் குழுவின் நடவடிக்கைகள், உலக வங்கி தருவதாக ஒப்புக் கொண்டு இருக்கிற நிதியுதவி, பட்ஜெட் குறிப்பிடும் இந்தியப் பொருளாதார மந்த வளர்ச்சி, நிதிப் பற்றாக்குறை உள்ளிட்டவை - யதார்த்தம் கலந்த அவலம். இத்தனைக்கு மத்தியிலும் ரூ. 49,000 கோடி முதலீட்டில் தூத்துக் குடியில் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை, விழுப்புரம், ராமநாதபுரத்தில் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம், மின்சார வாரியத்தின் இழப்பை ஈடு கட்டும் வகையில் நிதி உதவி ரூ.4,265 கோடி; புதிதாக 52 கி.மீ. நீளத்துக்கு மெட்ரோ ரெயில் அமைக்க ரூ.3,100 கோடி... என்று அறிவிப்புகள் நீள்கின்றன. இவை சாத்தியமானால் உண்மையில் சாத னைதான். வேலை வாய்ப்புகளை உரு வாக்கும், அரசுக்கு நிதி வருவாயைப் பெருக்கும் திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் இல்லை; நேரடியாகத் தொழில் துறைக்குப் பெரிய அளவில் எந்த சலுகையும் இல்லை என்ற குற்றச்சாட்டு எழலாம். நியாயம்தான். ஆனாலும், விவசாயம், நெசவு, மீன்பிடித்தல் போன்ற மரபுத் தொழில்களை வலுவாக்கினாலே, வாய்ப்புகள் தானாகப் பெருகும். அதுதான் நமது பொருளாதாரத்துக்கு நிரந்தர நன்மையைத் தரும்.
அந்த வகையில், பட்ஜெட் சரியான இலக்கு நோக்கிதான் பாய்ந்து இருக்கிறது. எல்லாமே நல்லதாகவே சொன்னால் எப்படி..? அத்தனை சிறப்பான பட்ஜெட்டா இது? குறைகள் இல்லாமல் இல்லை. அதைப் பலரும் விரிவாகச் சொல் லத்தான் போகிறார்கள். ஆனால், நவீனத்துக்கு அடிமையாகாமல் மரபுசார் தொழில்களுக்கு முக்கியத் துவம் கொடுத்ததில், கிராமப்புற பொருளாதாரம் மேம்பட வாய்ப்புகள் ஏற்படுத்தித் தந்ததில், இந்த பட்ஜெட் தனித்து நிற்கிறது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews