Breaking

Tuesday, February 04, 2020

'பொதுத்தேர்வு அச்சம் வேண்டாம்' : மயில்சாமி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
'ஐந்து, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நடக்க உள்ளது, பொதுத்தேர்வு அல்ல; மாணவர்களை பற்றி தெரிந்து கொள்ள, மதிப்பீடு தான் என்பதால், பெற்றோர் அச்சப்படத் தேவையில்லை,'' என, விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறினார். சேலம், வலசையூரில்உள்ள, தனியார் பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்ற, விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, நிருபர்களிடம் கூறியதாவது:சர்வதேச தரத்தில், பாடத்திட்டத்தை உருவாக்கி, ஆசிரியர்களுக்கும் சரியான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.என் காலத்தில், குழந்தைகளுக்கு, அம்மைக்கு மட்டும் தான் தடுப்பூசி போட்டனர். தற்போது, 10 தடுப்பூசிகள் போடப்படுகின்றன. நாமும், ஆண்டுக்கொருமுறை உடல் பரிசோதனை செய்கிறோம். உடல் நிலைக்கேற்ப, உணவு முறைகளில் மாற்றம் செய்து கொள்கிறோம்.
அதுபோன்று, உடல் மற்றும் கல்வி ரீதியாக, மாணவர்களை மதிப்பீடு செய்ய வேண்டிய நிலை உருவாகி வருகிறது. பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், 'நீட்' தேர்வுக்கு தங்களை தயார்படுத்த வசதியாக, அவர்களுக்கு மதிப்பீடு வழங்க வேண்டி இருக்கிறது.தமிழக அரசு, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, பொது மதிப்பீடு நடத்த உள்ளது. இது பொது தேர்வல்ல; மாணவர்களுக்கு மதிப்பீடு தான். அனைத்து மாணவர்களும், ஒரே மாதிரி வினாத்தாளுக்கு, தேர்வு எழுதுவர். அவர்களின் நலனுக்கு, இதுபோன்ற தேர்வு வைப்பது தான் நல்லது.மாணவரிடம் உள்ள, கணிதம், அறிவியல் திறமைகளை வெளிக்கொண்டு வர, மதிப்பீடுஅவசியமாக இருக்கிறது. அந்த வகையில் இத்தேர்வுகள், மாணவர்களுக்கு நல்ல மதிப்பீடாக அமையும். இதனால் மாணவர்கள், பெற்றோர் அச்சப்பட வேண்டாம். இவ்வாறு, அவர் கூறினார்.
5 மற்றும் 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெறுவார்கள் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னை அடையாறில் சமபந்தி விருந்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், 5 மற்றும் 8-ஆம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் 5 மற்றும் 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அனைத்து மாணவர்களுமே தேர்ச்சி பெறுவார்கள் என்று தெரிவித்தார். மேலும், 'மாணவர்களின் கல்வித்திறன் மற்றும் வளர்ச்சிக்காகவே பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது, எனவே, வரும் பொதுத்தேர்வில் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவார்கள்' என்றார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog