Search This Blog
Saturday, February 01, 2020
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அரூர் தர்மபுரி மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள 37 அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுனர் பணியிடங்களுக்கு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பங்களை வாங்கிச் சென்றுள்ளனர்.தர்மபுரி மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் செயல்படும் தர்மபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமையகம் மற்றும் கிளைகளில் 34 அலுவலக உதவியாளர் மற்றும் மூன்று ஓட்டுனர் என 37 பணியிடம் காலியாக உள்ளது.
இந்த பணியிடங்களை நேர்முகத் தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு கடந்த 10 முதல் தர்மபுரி மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி (தலைமையகம்) மற்றும் அதன் கிளைகள் அமைந்துள்ள நல்லம்பள்ளி பாப்பிரெட்டிப்பட்டி அரூர் காரிமங்கலம் பென்னாகரம் பாலக்கோடு ஆகிய ஏழு இடங்களில் இலவசமாக விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இப்பணியிடத்திற்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆதரவற்ற விதவைகள் தவிர மற்றவர்கள் விண்ணப்பப் பதிவு மற்றும் நேர்முகத் தேர்வு கட்டணமாக 150 ரூபாய் வரைவோலையாக செலுத்த வேண்டும். பிப். 7 மாலை 5:45 மணிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டும். நேற்று பகல் நிலவரப்படி 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப் பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்னும் ஏழு நாட்கள் உள்ளதால் மேலும் ஏராளமானோர் விண்ணப்பங்களை வாங்கிச் செல்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. 37 இடங்களுக்கு ஆயிரக்கணக்கானோர் போட்டியிடும் நிலையில் யாருக்கு வேலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு விண்ணப்பதாரர்களிடையே ஏற்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
37 அலுவலக உதவியாளர் பதவிக்கு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கடும் போட்டி!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.