Breaking

Wednesday, February 05, 2020

பிளாஸ்டிக் 'டிப்ளமோ': விண்ணப்பிக்க வாய்ப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மத்திய அரசின் பிளாஸ்டிக் தொழில்நுட்ப பயிற்சி வகுப்பில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பிளாஸ்டிக் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (சிபெட்) டிப்ளமோ, முதுநிலை டிப்ளமோ, தொழில் திறன் மேம்பாட்டு பயற்சி நடத்தி வருகிறது. தற்போது, 2020-21க்கான மாணவர்சேர்க்கை குறித்து அறிவிப்பு வெளியிட்டுஉள்ளது.
அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் ஒப்புதல் (ஏ.ஐ.சி.டி.இ.,) பெற்ற டிப்ளமோ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் வழியாக மேற்கொள்ளப்படுகிறது. பிளாஸ்டிக் அச்சுவார்பியல் தொழில்நுட்பம் மற்றும் பிளாஸ்டிக் தொழில்நுட்பம் ஆகிய 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகளில் சேர 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.'சிபெட்' நிறுவனத்தில்3 ஆண்டு டிப்ளமோ படித்தவர்கள் நேரடி இரண்டாம் ஆண்டில் அண்ணா பல்கலை கல்லுாரிகளில் பி.இ., படிப்பில் சேரலாம்.
டிப்ளமோ சேர்க்கை குறித்து விவரங்களை www.cipet.gov.in இணையதளத்தில் அறியலாம். விண்ணப்பிக்கும் நாள் ஜனவரியில் துவங்கியுள்ளது. மே 22 விண்ணப்பிக்க கடைசி நாள். மே 31ல் நுழைவு தேர்வு நடக்கிறது. ஜூலை 1ம் தேதி வகுப்புகள் துவங்கும். கூடுதல் விவரங்களுக்கு 9444622771, 8939039929ல் பேசலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog