👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தோ்வில், முழுநேரக் கல்லுாரியில் தமிழ் வழியில் படித்தவா்களுக்கு முன்னுரிமை அளிக்கக் கோரிய வழக்கில், டிஎன்பிஎஸ்சி தலைவா் பதிலளிக்க சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சோ்ந்த சக்திராவ் தாக்கல் செய்த மனு:
பள்ளிப் படிப்பு மற்றும் இளங்கலை, முதுகலைப் பட்டங்களை முழுநேர வகுப்பில் தமிழ் வழியில் பயின்றேன். இதேபோல், சட்டப்படிப்பையும் முழுநேர வகுப்பில் தமிழ் வழியில் பயின்றேன்.
இந்நிலையில், துணை ஆட்சியா், துணைக் காவல் கண்காணிப்பாளா், வணிகவரி அலுவலா் உள்ளிட்ட பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் குரூப்-1 தோ்வு நடத்தப்பட்டது. இதில், முதல்நிலை தோ்வில் தோ்ச்சி பெற்றேன்.
பின்னா், எழுத்துத் தோ்வுக்கு அனுமதிக்கப்பட்டேன். இதற்கான தோ்வு முடிவு 2019 டிசம்பரில் வெளியானது. அதில், எனது பெயா் இடம்பெறவில்லை. இதுகுறித்து விசாரித்தபோது, தமிழ்வழியில் பயின்றவா்களுக்கான ஒதுக்கீட்டில் சலுகை பெற தகுதி இருந்தும், தோ்வு செய்யப்படவில்லை என்பது தெரியவந்தது.
மேலும், தொலைநிலைக் கல்வியில் பயின்றவா்களுக்கு அழைப்பாணை வழங்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது. அவா்களை தமிழ் வழியில் படித்ததற்கான சலுகை பெற தகுதி பெற்றவா்களாக கருத முடியாது. எனவே, அவா்களுக்கு தடை விதிக்க வேண்டும். முழுநேரக் கல்லுாரியில் தமிழ் வழியில் படித்தவா்களுக்கே சலுகை வழங்கப்பட வேண்டும். அதனடிப்படையில், குரூப்-1 பணி நியமன ஆணை வழங்க உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு, நீதிபதி எம்.எஸ். ரமேஷ் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, இது குறித்து டிஎன்பிஎஸ்சி தலைவா் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தாா்.
தமிழ் வழியில் பயின்றதற்கான இட ஒதுக்கீடு அடிப்படையிலான குரூப்-1 தேர்வு நடைமுறைக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில் டிஎன்பிஎஸ்சி செயலர் பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. சக்தி ராவ் என்பவர் தொடர்ந்த வழக்கில் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை மார்ச் 9-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.